Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது!

Jan 29, 2024


ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது!

 

புதிய பொதுச் சேவை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதில்லை என்ற பரிந்துரை நாட்டின் எந்த சமூகத்தினரையும் பாதிக்காது! 

அவ்வாறு கூறப்படுவதை பிரதமர் Datuk Seri Anwar Ibrahim திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

நாடு திவாலாகும் அபாயத்தைத் தடுக்க, வெகு காலமாகவே அப்பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு தான் வருகிறது என அவர் சொன்னார். 

இதனிடையே, பிரதமரின் துணைவியார் Datuk Seri Dr Wan Azizah Wan Ismail ஒரே ஓர் ஓய்வூதியத்தை மட்டும் பெற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளார். 

அவருக்கு அரசாங்கத்தின் முன்னாள் மருத்துவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியவற்றுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். 

ஒன்றுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும், MP-க்கள் ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தியதற்கு ஏற்ப Wan Azizahவின் அம்முடிவு அமைகிறது. 

---------  

இதனிடையே ஊழல் தொடர்பான எந்த விசாரணையிலும் தமது தலையீடு இருக்காது என்பதை மீண்டும் அறிவுறுத்தியுள்ளார் பிரதமர்! 

குறுக்கு வழியில் பணம் சேர்க்கும் யாராக இருந்தாலும் வெளிப்படையான விசாரணை மேற்கொண்ட அவர்களது குற்றம் கண்டறியப்படும் என அவர் கூறியுள்ளார். 

அது தனது அமைச்சர்களோ, துணை பிரதமரோ யாராக இருந்தாலும் சரி என அவர் திட்டவட்டமாகச் சொன்னார். 

-------- 

மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொள்ளாயிரத்து எழுபதாகக் குறைந்துள்ளது! 

அவர்களில் பெரும்பாலானோர் திரங்கானுவைச் சேர்ந்தவர்கள். 

பஹாங் மற்றும் ஜொகூரில் தலா முப்பதுக்கும் குறைவானோர் இருக்கின்றனர். 

--------  

மற்றொரு நிலவரத்தில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் மற்றும் சரவாக்கில் கனமழை எச்சரிக்கை! 

அம்மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தது இன்றிரவு பதினோரு மணி வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது. 

---------  

16ஆவது மாமன்னரை வழியனுப்பும் நிகழ்வை ஒட்டி, நாளை காலை ஒன்பது மணி தொடங்கி KL-லில் சில முக்கியச் சாலைகளும், நெடுஞ்சாலைகளும் கட்டங்கட்டமாக மூடப்படுகின்றன. 

சாலை பயனீட்டாளர்கள் விதிமுறையைப் பின்பற்றி நடந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather