Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

விபத்துகள் குறைந்தபாடில்லை!

Mar 21, 2024


 

விபத்துகள் குறைந்தபாடில்லை!

2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்தாண்டு நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 13 விழுக்காடு உயர்ந்துள்ளது! 

கடந்தாண்டு மட்டும் 23 ஆயிரம் விபத்துகள் பதிவாகியிருக்கின்றன. 

அவற்றுள் ஆயிரத்து இருநூரு விபத்துகள் கனரக வாகனங்களை உட்படுத்தியவை என பொதுப்பணி அமைச்சு கூறியது. 

கடந்தாண்டு சாலை நெரிசலின் எண்ணிக்கையும் பத்து விழுக்காடு அதிகரித்துள்ளது. 

அக்காலகட்டத்தில் பிரதான விரைவுச் சாலைகளை நூற்று 90 கோடி வாகனங்கள் பயன்படுத்தியுள்ளன. 

------- 

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அடுத்த மாதம் எட்டாம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை காவல் துறை Ops Selamat சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளும்! 

பெருநாளை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் பயணம் சுமூகமாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதிச் செய்வதே அதன் நோக்கமாகும். 

இதனிடையே இந்த நோன்பு மாதத்தில் வேலையைத் தவிர்த்து, பொருட்கள் வாங்கும் நோக்கங்களுக்காக தலைநகரில் ஏறக்குறைய பத்து லட்சம் வாகனங்கள் தினசரி வந்து போவதாகக் காவல் துறை சொன்னது. 

------ 

நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் திறந்த வெளி எறிப்பு நடவடிக்கையின் எண்ணிக்கையில் அதிரடி உயர்வு காணப்படுகிறது! 

ரமலான் மாதம் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் இருநூற்று ஐம்பது இடங்களில் திறந்த வெளி எறிப்பு நடவடிக்கைகள் பதிவானதாக மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை கூறியது. 

இது சராசரி எண்ணிக்கையை விட 40லிருந்து 60 விழுக்காடு அதிகமாகும். 

------- 

சமூக அடிப்படையிலான கைதிகள் மறுவாழ்வுத் திட்டம் தொடரும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது! 

இம்முறையால் குற்றங்களைத் திரும்பச் செய்யும் கைதிகளின் எண்ணிக்கை குறைவதைக் காண முடிவதாக அத்துறை சொன்னது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather