Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஆசிரியர்களே கவனம்!

Mar 25, 2024


ஆசிரியர்களே கவனம்!

சமூக வலைத்தளவாசிகள், குறிப்பாக ஆசிரியர்கள் சிறார்களை உட்படுத்திய உள்ளடக்கங்களைப் பதிவிடும் முன் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதியைப் பெற வேண்டும்! 

அதற்கென ஆசிரியர்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல் ஏதும் இல்லை என்றாலும், 2017ஆம் ஆண்டு கல்வி அமைச்சு வெளியிட்ட ஆசிரியர்கள், மாணவர்களை உட்படுத்திய சமூக ஊடக நெறிமுறை விதிகளைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டது. 

அனுமதி இல்லாமல் சமூக ஊடகங்களில் யாராவது தங்கள் பிள்ளைகளைப் பயன்படுத்தி உள்ளடகங்களைப் பதிவிட்டால், அது குறித்து பெற்றோர் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் புகாரளிக்கலாம். 

MCMC சம்பந்தப்பட்ட சமூக ஊடகத்தைத் தொடர்புக் கொண்டு, அந்த உள்ளடக்கத்தை நீக்கும் என அவ்வமைச்சு மேலும் சொன்னது. 

---------  

அதிக லாபத்திற்கு மட்டும் இலக்கு வைத்து வணிகம் செய்பவர்களிடத்தில் அனுசரனை காட்டப்படாது! 

அப்படியானவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை பாயும் என, உள்நாட்டு வாணிக வாழ்க்கை செலவீன அமைச்சு எச்சரித்தது. 

பயனர்கள் அல்லது வாடிக்கையாளர்களும் இதற்கு உதவ வேண்டும். 

இம்மாதிரியான வணிகர்களைப் பார்த்தால் உடனே அதை சமூக ஊடகங்களுக்குக் கொண்டுச் செல்லாமல், அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

--------  

Ops Pantau சோதனை நடவடிக்கையில்  84 வணிகக் குற்றங்களை KPDN பதிவுச் செய்துள்ளது! 

அதில் நான்கு லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

நாடு முழுவதும் அறுநூருக்கும் அதிகமான Aidilfitri சந்தைகளும் சோதனையிடப்பட்டதாக அவ்வமைச்சு சொன்னது. 

-------- 

சிலாங்கூர், Sungai Bulohவில் ஊழியர் தங்கும் விடுதியின் 16ஆவது மாடியிலிருந்து விழுந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான். 

மாலை நேரத்தில் பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் வீட்டின் ஜன்னல் பக்கமிருந்து அச்சிறுவன் தவறிவிழுந்ததாகக் காவல் துறை கூறியது. 

-------- 

பேராக், Kuala Kangsar, பெர்லிஸ், Sabah,Beufort ஆகிய பகுதிகளில் இரண்டாம் நிலை வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது! 

அப்பகுதிகளில் வெப்பம் 37லிருந்து 40 பாகை செல்சியசாக இருக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது. 

கெடா, மலாக்கா, நெகிரி செம்பிலான், ஜொகூர், பஹாங், கிளாந்தான், சபா மற்றும் சரவாக்கில் மொத்தம் 29 இடங்களில் முதல் நிலை வெப்ப எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather