Skip to main content
NS மந்திரி பெசார் பதவியில் மாற்றமில்லை !

 

உலகக் கிண்ண கராத்தே போட்டியின், ஆடவர் குழுப் பிரிவு போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ள 20 நாடுகளில், மலேசியாவும் இடம்பெற்றிருக்கின்றது !

இதுவே, தேசிய கராத்தே அணிக்கு ஒரு வெற்றி தான் என, அதன் வீரர் கிரிஜேஸ்வரன் பிள்ளை சிவநேசன் கூறுகிறார் !

அப்போட்டியில் வெற்றி பெறுவதைத் தாண்டி, அங்கு கிடைக்கும் அனுபவங்கள் தான் முக்கியமானவை என கிரிஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

அதன் அனுபவங்களைக் கொண்டு, அடுத்த சீ விளையாட்டுப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணற முடியும் என அவர் சொன்னார்.

உலகக் கிண்ண கராத்தே போட்டி இன்று தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

-----------

Hong Kong பொது பூப்பந்து போட்டியில், ஆடவர் இரட்டையர் Man Wei Chong - Tee Kai Wun, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !

அவர்களோடு சேர்த்து, கலப்பு இரட்டையர் Goh Soon Huat - Shevon lai-யு, அச்சுற்றில் கால் பதித்தனர்.

மகளிர் இரட்டையர் Pearly Tan - M.Thinaah, இன்றிரவு விளையாடுகின்றனர்.

----------

Manchester United-டை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுவர, Mauricio Pochettino-வால் முடியுமா என்ற கேள்விக்கு, ரசிகர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன !

Astro Audio செய்திப் பிரிவு நடத்திய கருத்துக் கணிப்பில், 35 விழுக்காட்டினர் Pochettino-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

34 விழுக்காட்டினர், அவர் மீது நம்பிக்கை இல்லை என்றும், எஞ்சிய 31 விழுக்காட்டினர், அதுகுறித்து அக்கறையில்லை என்றும் கூறினர்.

RAAGA Aaha Siranta Isai!