Skip to main content
NS ; நாளை வேட்புமனுத் தாக்கல் !

 

Negeri Sembilan தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறுகிறது !

காலை 9 மணி முதல் 10 மணி வரைக்கும் 8 மையங்களில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்.

அதில், 761 தேர்தல் ஆணைய பணியாளர்கள் பணியில் இருப்பர்.

இவ்வேளையில், நாளை காலை அங்கு பெரும்பாலான பகுதிகளில் வானிலை சீராகவும், மாலையில் சில பகுதிகளில் மழை தூறவும் வாய்ப்புள்ளதாக, Met Malaysia முன்னதாக தெரிவித்திருந்தது.

ஆகஸ்டு 1-ஆ தேதி, அம்மாநிலத்தில் 36 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

அவ்வனைத்து தொகுதிகளிலும், Pakatan Harapan போட்டியிடுகின்றது.

Pakatan Harapan அறிவித்துள்ள தனது வேட்பாளர் பட்டியலில், 5 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Manivanan Gown, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் J அருள் குமார், Dr G ராஜசேகரன் ஆகியோர், அவர்களில் அடங்குவர்.

தேசிய முன்னணி 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

அது அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில், ம.இ,கா சார்பில், இரு இந்தியர்கள் இம்முறை போட்டியில் குதித்துள்ளனர்.

Sri Tanjung தொகுதியில், A.அச்சுதன் மற்றும் Seremban Jaya-வில் R T தினாளன் ஆகியோரே அந்த இருவராவர்.

Perikatan Nasional, 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதில் Lukut தொகுதியில்,  MIPP சார்பில், சத்தீஸ் குமார் நீலமேஹம் களமிறங்குகிறார்.

RAAGA Aaha Siranta Isai!