Skip to main content
NS தேர்தல் ; 200 அதிகாரிகள் பணியில் இருப்பர் !

 

Negeri Sembilan தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்யும் நடவடிக்கையில், காவல்துறை இறங்கியுள்ளது !

பாதுகாப்பு பணிகளுக்காக, சுமார் 200 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை தெரிவித்தது.

அத்தேர்தல் காலம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் வகையில், KDNKA-வும், தேர்தல் ஆணையமும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

ஆகஸ்டு 1-ஆம் தேதி அங்கு 36 தொகுதிகளில், தேர்தல் நடைபெறுகின்றது.

அதில் 103 வேட்பாளர்கள் போட்டியில் குதித்துள்ளனர்.

---------

இதனிடையே, Negeri Sembilan தேர்தலை முன்னிட்டு, ஜூலை 18 முதல் நேற்று வரை பெறப்பட்ட 178 அரசியல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்களில், 173-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது !

அனுமதி வழங்கப்பட்ட அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளும், சட்டத்துக்கு உட்பட்டு நடைபெறுவதை, காவல்துறை உறுதிச் செய்யும்.

அதே காலகட்டத்தில், தேர்தல் குற்றங்கள் தொடர்பில், அத்துறை 9 புகார்களைப் பெற்றுள்ளது.

----------

மற்றொரு நிலவரத்தில், நெகிரி செம்பிலானில் உள்ள தெமியாங் சிறைச்சாலையில், கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மற்றும், மற்றொரு கைதி முறையற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது !

இவ்விவகாரம் தொடர்பான காவல்துறை விசாரணை நிறைவடைந்த பின்னரே, மேலதிக அறிக்கையை வெளியிட முடியும் என, சிறைத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாத மத்தியில், இரண்டு மாத சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த 69 வயதுடைய கைதி ஒருவர் உயிரிழந்ததாக, செய்திகள் வெளிவந்தன.

---------

சிலாங்கூர் ஷா அலாமில், 7 மில்லியன் ரிங்கிட் பணம் கேட்டு கடத்தப்பட்டு, பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்ட நபர், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், சிறப்பு தடுப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் !

மேலதிக விசாரணையில், இந்தக் கடத்தல் சம்பவம், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய அம்சங்கள் கண்டறியப்பட்டன.

----------

பினாங்கு GEORGE TOWN-னில், துப்பாக்கி போன்ற பொருளைப் பயன்படுத்தி, மற்ற இருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் 18 வயதான இளம் தம்பதியினர் இருவர், கைது செய்யப்பட்டுள்ளனர் !

RAAGA Aaha Siranta Isai!