
2027-ஆம் ஆண்டு முழுவதும், ஒப்பந்த அடிப்படையிலான 9 ஆயிரம் மருத்துவர்களுக்கு, நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கும் செயல்முறையைச், சுகாதார அமைச்சு நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது !
இதன் வழி, மருத்துவர்களுக்கான இடைக்கால ஒப்பந்த முறை முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
அந்த செயல்முறையை விரைவுபடுத்த, வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட நிர்வாக அணுகுமுறை தேவைப்படுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று, 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்த பிரதமர், ஒப்பந்த அடிப்படையிலான, ஒன்பதாயிரம் மருதுவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இனிவரும் காலங்களில், முதுநிலைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மருத்துவர்களுக்கு, மருத்துவ அதிகாரிகளாக நிரந்தரப் வேலை வாய்ப்பு வழங்கப்படும்
---------
இதனிடையே, மது போதை அல்லது போதை பொருளை எடுத்துக் கொண்டு, உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வாகனமோட்டிகள், இனி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் !
அதற்கு இடமளிக்கும் விதமாக, சாலை போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, 2027 பஜ்ஜெட்டை தாக்கல் செய்தபோது, பிரதமர் அறிவித்தார்.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, மது அல்லது போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதால், 28 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
-----------
இவ்வேளையில், சாரா உதவித் தொகைக்காக அடுத்தாண்டு 16 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது !
அவ்வொதுக்கீட்டின் கீழ் 90 லட்சம் பெறுநர்கள் ஆண்டுக்கு 150 முதல் ஆயிரத்து எண்ணூரு ரிங்கிட் வரை பெறுவர் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், ரஹ்மா மற்றும் Agro மடானி விற்பனைக்காக 750 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
---------
மற்றொரு பக்கம், பள்ளி தொடங்குவதற்கு முன்பு வழங்கப்படும் உதவித் தொகை, 150 ரிங்கிட்டிலிருந்து இருநூரு ரிங்கிட்டாக உயர்கிறது !
மேலும், முதியோருக்கான உதவித் திட்டங்களுக்காக, ஒன்று புள்ளி மூன்று பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.
----------
இதனிடையே, ஈராயிரத்து ஐநூரு ரிங்கிட்டுக்கும் கீழ் மாதாந்திர சம்பளம் வாங்குவோர், தங்களின் PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கலாம்.
ஈராயிரத்து ஐநூற்று ஒன்று முதல், மூவாயிரம் ரிங்கிட் வரை சம்பளம் பெறுவோர், மாதத்திற்கு குறைந்தபட்சமாக ஐம்பது ரிங்கிட்டிலிருந்து தங்களின் கடனுதவியைத் திருப்பிச் செலுத்தலாம்.