
இந்தியா தமிழகத்தில், தடுப்புக் காவலில் அடித்துக் கொல்லப்பட்ட தந்தை மகன் வழக்கில் குற்றஞ்ச்சாட்டப்பட்ட ஒன்பது காவல் வீரர்களுக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!
2020ஆம் ஆண்டு கோவிட் 19 பெருந்தொற்று காலக்கட்டத்தில், ஊரடங்கு உத்தரவின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடையைத் திறந்து வைத்திருந்ததற்காக, பாதிக்கப்பட்ட இருவரும் கைதாகினர்.
58 வயதான P Jeyaraj மற்றும் அவரது மகன் 38 வயது Benicks ,தடுப்புக் காவலின் போது தாக்கப்பட்டு,பின்னர் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தனர்.
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒன்பது காவல் வீரர்களும் குற்றவாளிகள் என்பது ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றனர் என நீதிமன்றம் கூறியது.
அதிகாரம் இருக்க வேண்டிய இடத்தில் பொறுப்பும் இருக்க வேண்டும்;
ஆனால் இங்கோ பொதுமக்களில் இருவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதையும், ஆதாரத்தை மறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் கடுமையாகக் கருதி, நீதிபதி அந்த இரட்டை மரண தண்டனையை விதித்தார்.
--
நாட்டில் கடந்த ஈராண்டுகளில் தடுப்புக் காவலில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 55 விழுக்காடு உயர்ந்துள்ளது!
அதே காலகட்டத்தில் சிறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சரிவு காணப்படுவதாக மலேசிய மனித உரிமை குரலான SUARAM தெரிவித்துள்ளாது.
தடுப்புக் காவலில் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையும் உயர்ந்துள்ளதை காண முடிவதாக அவ்வமைப்பு கூறியது.
--
சமூக ஊடகங்களில் பதிவை பகிர்வது, like செய்வது போன்ற இலகுவான வேலைகளைச் செய்தே பணம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தைகளே மோசடிக்காரர்களின் யுக்தியாகும்!
குறிப்பாக வேலை தேடும் அல்லது கூடுதல் வருமானம் தேடும் இணையத்தளவாசிகள் இதில் கவர்ந்திழுக்கப்படுகின்றனர் என புக்கிட் ஆமான் தெரிவித்துள்ளது.
கடந்த 15 மாதங்கள் வர்த்தகக் குற்றப்புலாய்வுத் துறை நடத்திய கண்காணிப்பில் இது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு, அக்காலக்கட்டத்தில் அம்மாதிரியான பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மோசடிகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.
--
ஜொகூர் செகாமாட்டில் போதை மருந்து உட்கொண்டு உயிரிப்பை உட்படுத்திய விபத்தை ஏற்படுத்திய trailer ஓட்டுனர் மீது, மூன்று கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன!
அச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
அதன் தொடர்பான காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.
--
ஜொகூரில் பொது வெளியில் சிகரெட் துண்டுகளை வீசிய குற்றத்துக்கு இரு சிங்கப்பூரிய ஆடவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அவர்கள் இவ்வாண்டு தொடக்கத்தில் அக்குற்றத்தைப் புரிந்தாகக் குற்றம் சாட்டப்பட்டது.