Skip to main content
ஒரே மாதத்தில் 7,000-க்கும் மேற்பட்ட வேலை இழப்பா?

 

ஏப்ரல் மாதத்தில் வேலை இழப்புகள் அதிகரித்ததைக் காட்டிய அண்மைய தரவுகளை, மலேசிய முதலாளிகள் சம்மேளனம் மறுத்துள்ளது !

தற்போது, நிறுவனங்கள் ஆட்களைப் பணியமர்த்துவதில் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக அச்சம்மேளனம் தெரிவித்தது.

தொழிலாளர்களுக்கு மறுபயிற்சி அளிப்பதிலும், தானியக்கத்தை மேம்படுத்துவதிலும், நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருவதாக, MEF கூறியது.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில்,  MEF அவ்வாறு சொன்னது.

---------

இதனிடையே, அண்மைய வேலை இழப்புகளைச் சமாளிக்க, அரசாங்கம் விரைவில் சிறப்பு நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளதாக, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார் !

அவை,  தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற, வேகமாக வளர்ந்து வரும் துறைகளில், மாற்று வேலை வாய்ப்புகளை வழங்குவதை உட்படுத்தியதாக இருக்கும், என்றாரவர்.

-----------

மலாக்கா Durian Tunggal-லில் மூவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், கூடுதல் விவரங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விசாரணை அறிக்கை, 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது !  

கடந்தாண்டு இறுதியில், அம்மூவர் காவல் அதிகாரி ஒருவரை பாராங் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் நடந்தது ; அப்போது, தற்காப்பிற்காக, காவல்துறையினர் அவர்களை நோக்கி சுட்டதாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன.  

----------

Negeri Sembilan Port Dickson-னில் உள்ள முதலை வாழிடங்களை மூடுவது அல்லது அனைத்து முதலைகளையும் இடமாற்றுவது சாத்தியமில்லை என, வனவிலங்கு துறை தெரிவித்துள்ளது !  

மாறாக, அண்மையில், Sungai Linggi ஆற்றில் மீனவரை தாக்கிய முதலைக்கேற்ப, நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அத்துறை,  அந்த முதலை பிடிக்கப்பட்டு, சிலாங்கூரில் உள்ள Paya Indah Wetlands பகுதிக்கு மாற்றப்படும், என்றது.

-----------

சிலாங்கூர் சுபாங் ஜயாவில், ஏரியில் தவறி விழுந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் ! 

RAAGA Aaha Siranta Isai!