
சிலாங்கூர் Bukit Kemuning-கில், 14 வயது பையனை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்திய ஆடவர், நாளை வரை தடுத்து வைக்கப்படுகிறார் !
தேவைப்பட்டால், அவருக்கெதிரான தடுப்புக் காவல் நீட்டிக்கப்படலாம்.
கடந்த வாரம், அச்சந்தேகநபர், தனது வீட்டில் பொருட்களை எடுத்துச் செல்ல உதவினால், அந்த பையனுக்கு, இணைய பாக்கேஜ் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றினாராம்.
ஆனால், உதவச் சென்ற அந்த பையனைக் கட்டிப்போட்டு, அந்நபர் இயற்கைக்கு புறம்பான செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
----------
கிள்ளானில், மதுபோதையில் இருந்த காரோட்டுநரால் மோதித்தள்ளப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார்சைக்கிளோட்டுநர், இன்னும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் !
அந்த காரோட்டுநர் மீது, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், அவர் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
------------
மற்ற செய்திகள் சுறுக்கமாக ;
பெட்டாலிங் ஜயாவில், இம்மாத தொடக்கத்தில் முதிய ஓட்டுநர் ஒருவர் மற்றும் உணவு விநியோக ஊழியரை உட்படுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து குறித்த விசாரணை அறிக்கைகளை காவல்துறை முடித்துள்ளது !
--------
பஹாங் ரொம்பின், ஜொகூர் மற்றும், சபா, சரவாக்கில் சில பகுதிகளில், இன்றிரவு 9 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது !
----------
தலைநகர் புக்கிட் பிந்தாங்கில், வாகனமொன்றின் பின்னால் நின்றவாறு, தீப்பந்தங்களைப் பிடித்து வந்ததாகக் கூறப்படும் கும்பலை, காவல்துறை தேடி வருகிறது !
--------
கிளாந்தான் GUA MUSANG-கில், பள்ளிக்கூட கழிவறையில் பெண் மாணவர்களை எட்டிப்பார்த்ததாகக் கூறப்படும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமயாசிரியரின் கணவர், ஒரு வாரத்திற்கு தடுத்து வைக்கப்படுகிறார் !