Skip to main content
ஒரு பில்லியன் ரிங்கிட் முதலீட்டுடன் சீனா!

 

 

 

சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் DSAI, அந்நாட்டைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்!

 

அச்சந்திப்பில் கலந்து கொண்ட செயற்கை நுண்ணறிவு இயந்திரவியல் நிறுவனம் ஒன்று, 2035ஆம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் ரிங்கிட்டை மலேசியாவில் முதலீடு செய்யவிருப்பதாக உறுதியளித்துள்ளது.

 

செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட அந்த முதலீட்டு முயற்சி கைகூடினால், அதன் மூலம் மலேசியாவுக்கு ஐயாயிரம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என பிரதமர் கூறினார்.

 

முதலீட்டு வாய்ப்புகளை ஈர்க்கும் தளமாக அமையும் இந்த சீனா பயணத்தில், பல்வேறு தொழில்நுட்ப, இயந்திரவியல், தானியக்கவியல், மின்னியல் வர்த்தக நிறுவனங்களுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்.

 

------

 

போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகும் தனது முடிவில் தீர்க்கமாக இருக்கிறார் Anthony Loke!

 

அலுவல் பயணமாக பிரதமருடன் சீனா சென்றுள்ள அவர், மலேசியா திரும்பியதும் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razakக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை அடுத்து, அந்த DAP பொதுச் செயலாளர் பதவி விலகும் தனது முடிவை அறிவித்திருந்தார். 

 

------

 

Sarawak, Serian-னில் காற்றின் தரம் மோசமாகியிருப்பதால், இன்று அம்மாவட்டத்தில் உள்ள எல்லா பள்ளிகளும் மூடப்படுகின்றன!

 

அதில் சம்பந்தப்பட்ட நூற்று எட்டு பள்ளிகளும் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

 

------

 

ஆகக் கடைசி தகவல்படி Serian-னில் காற்றின் தரம் இருநூற்று 20ஐக் கடந்து, தொடர்ந்து மிக ஆரோக்கியமற்ற பகுதியாக இருக்கிறது!

 

மலாக்காவின் Bukit Rambaiயிலும், சரவாக்கின் எஞ்சிய சில மாவட்டங்களிலும் API குறியீடு ஆரோக்கியமற்ற அளவைக் காட்டுகிறது.

 

------

 

இந்தியா, உத்தரபிரதேஷில் சொந்த குடும்பத்தையே கொலை செய்த 32 வயது நபரைக் காவல் துறை சுட்டுக் கொன்றுள்ளது!

 

மனைவி, மகன், வீட்டில் பூஜை செய்ய வந்த இரு புரோகிதர்கள் என மொத்தம் நால்வரை அந்நபர் சுட்டுக் கொன்ற நிலையில், சம்பவ இடத்தில் அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

 

 

RAAGA Aaha Siranta Isai!