
இன்று தொடங்கி தீபகட்பத்தில் ரோன்97, ரோன்95 மற்றும் டீசல் விலை முறையே ஐந்து சென் குறைகிறது.
ரோன் 97 ரக பெட்ரோல் 4 ரிங்கிட் 25 சென்னுக்கும், ரோன்95 3 ரிங்கிட் 77 சென்னுக்கும் விற்கப்படும்.
உதவித்தொகை வழங்கப்படாத டீசல் விலை 4 ரிங்கிட் 67 சென்னாக உள்ளது.
-----
EL Nino பருவத்தின் தாக்கமாக அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் புகைமூட்ட நிலவரம் மோசமாகவே தொடரலாம்!
Hotspot எனப்படும் வெப்பப் புள்ளிகளும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சுற்றுச்சூழல் துறை உதவி இயக்குனர் Azuri Azizah Saedon, Astro Awaniயிடம் தெரிவித்தார்.
புகைமூட்டத்திற்கு முக்கிய காரணமே, எரிப்பு நடவடிக்கைகள், வானிலை மற்றும் மழை பெய்யாதது, காற்று நிலவரம் ஆகியவை என்றார் அவர்.
புகைமூட்டம் குறித்த விரிவான மற்றும் அண்மைய நிலவரங்களுக்கு astroawani.comமை வலம் வரலாம்.
-----
இதனிடையே சரவாக்கின் Serian-னில் மட்டும் காற்றின் தரம் அபாய அளவில் இருக்கிறது!
Seri Aman, Kuching, Samarahan, Sarikei ஆகிய அம்மாநிலத்தின் பகுதிகள் மிக ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தைக் கொண்டுள்ளன.
சிலாங்கூரின் Johan Setia, லாபுவான் மட்டுமின்றி,சபா மற்றும் சவராக்கின் பெரும்பாலான பகுதிகளில் API குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் இருக்கிறது.
-----
Tabung Hajiயின் அரச விசாரணை ஆணைய அறிக்கை தொடர்பில் கைதான மூவர், இன்று மற்றும் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.