
1MDB ஊழல் வழக்கில் விதிக்கப்பட்டுள்ள 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் விண்ணப்பித்துள்ளார் !
அந்த விண்ணப்பம் தொடர்பாக அவரது வழக்கறிஞர், இன்று நடைபெற்ற வழக்கு மேலாண்மையின் போது, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரும் சான்றிதழும், தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கூறினார்.
----------
டசம்பர் 27-ஆம் தேதி வரை, ஒவ்வொரு வார இறுதியிலும், KL Sentral-JB Sentral-லுக்கு இடையில் கூடுதல் ETS ரயில் சேவைகளை அறிவித்துள்ளது KTMB நிறுவனம் !
அதற்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் ஏழாம் தேதியே தொடங்கிவிட்டது.
அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தக் கூடுதல் சேவைகள் வழங்கப்படுகின்றன.
--------
கோலாலம்பூரிலிருந்து பினாங்கு சென்ற விமானத்தில், பயணி ஒருவரின் கைப்பையில் இருந்து, 60 ஆயிரம் ரிங்கிட் பணத்தைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவரை, காவல்துறை தேடி வருகிறது !
விமானப் பயணத்தின்போது, தனது பணம் காணாமல் போனதாக, 54 வயது ஆடவர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
--------
மலாய் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவரான Tan Sri L.Krishnan, வயது மூப்பு காரணமாக, தனது 104-ஆவது வயதில், தாய்லாந்து Chiang Mai-யில் காலமானார் !
2016 மெர்டேக்கா விருதை வென்றவருமான அவர், மறைந்த மலாய் திரைப்பட சகாப்தம் Tan Sri P.Ramlee உள்ளிட்ட கலைஞர்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவராவார்.
--------
பஹாங் Raub-பில், சத்தம் எழுப்பியதாகக் கண்டிக்கப்பட்ட இரண்டு மியன்மார் நாட்டவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், காவல் வீரர் ஒருவர் தலையிலும் உடலிலும் காயமடைந்துள்ளார் !
---------
நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,700-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன ; அதில், 7 மரணங்கள் பதிவாகின !