Skip to main content
பெட்ரோல் மானியம் நிலைத்திருக்கும்!

 

 

உதவித் தொகை வழங்கப்படும் ரோன்95 ரக பெட்ரோல் விலையை அரசாங்கம் தொடர்ந்து ஒரு ரிங்கிட் 99 சென்னாகவே நிலைநிறுத்தும்!

வருடாந்திர எரிபொருள் உதவித் தொகை 45 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தாலும், அதில்  மாற்றமில்லை என பிரதமர் DSAI தெரிவித்தார்.

உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவீன சிக்கலிலிருந்து மக்களைப் பாதுகாக்க அது அவசியம் என அவர் கூறினார்.

உலகச் சந்தையைப் பின்பற்றினால், வாகனமோட்டிகளின் தினசரி எரிபொருள் செலவு கூடுதலாக இரண்டு முதல் ஐந்து ரிங்கிட் வரை உயரும் என அவர் அச்சம் தெரிவித்தார்.

நடப்பில் ரோன்95 ரக பெட்ரோலுக்காக அரசாங்கம் ஆண்டுக்கு 40 பில்லியன் ரிங்கிட் செலவிடுகிறது.

--

ஜொகூரில் நாளை தொடங்கி எல்லா கல்வி கூடங்களும் வழக்கம் போல் செயல்படும்!

புகைமூட்ட நிலவரத்தில் முன்னேற்றம் தென்படுவதை அடுத்து, அங்கு கல்விக் கூடங்களைத் திறக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அம்மாநிலத்தில் உள்ள நேற்றுக்கணக்கான பள்ளிகள் மோசமான காற்றுத் தரத்தால் மூடப்பட்டன.

--

இதனிடையே ஆகக் கடைசி தகவல்படி நாட்டில் 12 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது! 

சரவாக்கின் செரியானில் API குறியீடு மிக அதிகமாக 193ஆகப் பதிவாகியிருக்கிறது.

--

ஜொகூர் பாருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏழு வயது சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுவது குறித்து காவல் துறை நால்வரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளது.

RAAGA Aaha Siranta Isai!