
பினாங்கில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு 200-ரைத் தாண்டினால், மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டம் ரத்து செய்யப்படலாம் !
காரணம், அக்கொண்டாட்டத்தை உட்புற இடத்துக்கு மாற்றுவது சாத்தியமில்லை ; அதனால், நிலைமை மோசமாகினால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில முதலைமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், பினாங்கில் நிலவும் புகைமூட்டத்தின் நிலைமையை மாநில அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும், என்றாரவர்.
அக்கொண்டாட்டம், Padang Kota-வில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
---------
இதனிடையே, 9 மாநிலங்களின் சில பகுதிகள் புகைமூட்டமாக உள்ளன !
சரவாக்கின், Sri Aman, Serian, கோலாலம்பூரில், Cheras, Batu Muda ஆகிய பகுதிகளில், API குறியீடு 100-ரைக் கடந்து, ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது.
--------
நேப்பாளத்தில் ஏற்பட்டுள்ள மரண வெள்ளத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களில், தீயணைப்பு, மீடுத் துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகளும் அடங்குவர் !
தொடர்புக்கொள்ள முடியாமல் இருக்கும் அவ்வனைத்து மலேசியர்களை கண்டுபிடிக்கவும், அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கவும், Kathmandu-வில் உள்ள மலேசிய தூதரகம், கடினமாக உழைத்து வருகிறது.
--------
இதனிடையே, அந்த கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேப்பாளத்துக்கு, மனிதநேய உதவிகளை வழங்க, மலேசிய ராணுவம் தயாராக உள்ளது !
எனினும் இறுதி முடிவு, அரசாங்கத்தைப் பொருத்தது என, தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
---------
14.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், தங்கக் கட்டிகளில் முறைகேடு, சொத்துகளை அறிவிக்கத் தவறியதாக, இன்று நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob மறுத்தார் !