
பிரசவத்திற்குப் பிந்தைய விடுமுறை அலாவன்சை எந்த நேரத்திலும் அமுல்படுத்த தயார் என, சமூக பாதுகாப்பு அமைப்பு சொக்சோ தெரிவித்துள்ளது!
அதிகமான பெண்கள் பிரசவம் முடிந்த வேலைக்குத் திரும்ப உதவ அத்திட்டம் பெரிதும் உதவும் என அது கூறியது.
இது மாதிரியான முறை ஏற்கனவே France, Spain சீனா போன்ற நாடுகளில் அமுலில் இருப்பதை அவ்வமைப்பு சுட்டிக் காட்டியது.
தொழிலாளர் தினத்தை ஒட்டிய தனது சிறப்புறையில் பிரதமர் அத்திட்டத்தை அறிவித்தார்.
-----
MyDigital ID யைப் பயன்படுத்தி எழுபது லட்சம் பயனர்கள் MyJPJ தளத்திற்குப் பதிந்துக் கொண்டுள்ளனர்!
இதையடுத்து MyDigitalIDக்கு இதுவரை பதிந்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சத்தைத் தாண்டியுள்ளது.
-----
பினாங்கில் முதல் வெப்பம் தொடர்பான மரணம் பதிவாகியிருக்கின்றது!
கடந்த மாதம் ஓட்டப் பந்தையம் ஒன்றில் கலந்து கொண்ட 42 வயது நபர் ஒருவர் வெப்ப வாதத்தால் உயிரிழந்துள்ளார்.
-----
மலாக்காவில், ஆதரவற்றோர் இல்லத்தில் ஆறாம் ஆண்டு மாணவரைப் பகடிவதை செய்த சந்தேகத்தின் பேரில், காவல் துறை நான்கு பதின்ம வயதினரைக் கைது செய்துள்ளது.
------
சிலாங்கூர், கிள்ளானில் ஓடிக் கொண்டிருந்த E hailing வாகனத்திலிருந்து குதித்த பெண் சிறிய காயங்களுக்கு ஆளாகினார்.
ஓட்டுனர் தம்மைக் கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் பயந்து அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.