கூட்டரசு நீதிமன்ற சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிரம்படி தண்டனை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதல்ல !
அது, தண்டனை அளிக்கும் நோக்கத்திற்காகவே என பெரும்பான்மைத் தீர்ப்புகளை வழங்கிய தலைமை நீதிபதி Datuk Seri Wan Ahmad Farid Wan Salleh விளக்கியுள்ளார்.
மேலும், அத்தண்டனை மரண தண்டனைக்கு நிகரானதல்ல என்றும், கொடூரமானது, மனிதாபிமானமற்றது, பாகுபாடு கொண்டது என கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
முன்னதாக, மூன்று கைதிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட பிரம்படி தண்டனையை ரத்து செய்யக் கோரிய நிலையில் அவ்விளக்கம் அளிக்கப்பட்டது.
--
ஜொகூரில்,31 வயதான தொழிற்சாலை மேற்பார்வையாளர் ஒருவர், காவல் துறைக்கு 18,500 ரிங்கிட் கையூட்டு கொடுத்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அவர் தன்னையும் தனது நண்பர்களையும் பற்றிய குற்ற பதிவுகளை புறக்கணிக்கக் கோரி அந்த கையூட்டை வழங்கியதாக நம்பப்படுகிறது.
--
கெடா, Sungai Petani-யில் OP Mabuk நடவடிக்கையின் போது கைதான நபர் ஒருவர் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
30 வயதான அவர் குடிபோதையில் டிரெய்லர் ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.
--
சரவாக் கூச்சிங்கில், கடந்த மார்ச் மாதம் மோதிவிட்டுத் தப்பிச் சென்ற சாலை விபத்தில், 24 வயது இளைஞர் தனது இடது காலை இழந்த நிலையில், அவரது தாய் சம்பந்தப்பட்ட டிரைவர் விசாரணக்கு உதவ முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
--
சிங்கப்பூரில், வணிக வளாகம் ஒன்றில், பெண் ஒருவரைக் கடுமையாகத் தாக்கி வைரலான 47 வயது சந்தேக நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
பிப்ரவரி 8 அன்று அச்சம்பவம் குறித்து புகார் பெற்றதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.