
ஒருவரை அச்சுறுத்தும், துன்புறுத்தும் மாதிரியான பகடிவதைக் கலாச்சாரங்களுக்குக் முடிவுக் கட்ட வேண்டும் !
குறிப்பாக பள்ளிகளில் என சட்ட சீர்திருத்த அமைச்சு தெரிவித்துள்ளது.
பகடிவதைச் சம்பவங்களைப் பள்ளிகளில் இயல்பான ஒன்றாக ஒருப்போதும் பார்க்கக்கூடாது.
நற்பண்புகளை இழக்காத மனிதநேயமிக்க எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில், பள்ளிகள் கவனம் செலுத்த வேண்டும் என அது கூறியது.
அப்பிரச்சினையை எதிர்கொள்ள அரசாங்கம் தக்க தர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதில் ஒரு பகுதியாகத்தான் கடந்த ஜூன் மாதம் பகடிவதை தடுப்பு நடுவர் மன்றம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்ட்து.
அதன் கீழ் 55 புகார்கள் வந்துள்ளன.
---------
மலாக்கா மாநிலத் தேர்தல் காலத்தில், 3,150 காவல் அதிகாரிகள் பணியமர்த்தப்படவுள்ளனர்!
அவர்களில் 1500-க்கும் மேற்பட்டோர் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் கூடுதல் படையினர் என மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
16ஆவது சட்டமன்ற தேர்தலுக்கு வழிவிட ஏதுவாக மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறது, நேற்று மலாக்கா மாநில முதலமைச்சர் அறிவித்தார்.
--------
உயர் தொழில்நுட்பத் துறைகளுக்குத் தேவையான திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க அரசாங்கம் TVET தொழில்ப்பயிற்சி கல்வியை வலுப்படுத்தவுள்ளது !
Semiconductor, செயற்கை நுண்ணறிவு, புத்தாக்க ஆற்றல், EV வாகன உற்பத்தி போன்றவற்றுக்கு, தகுந்த மனிதவளத்தை உருவாக்குவதே அதன் நோக்கம் என பிரதமர் DSAI கூறினார்.
--------
மாற்றுத்திறனாளி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வண்ணம், 2027 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அவர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது !
------
பேராக், ஈப்போவில் சுகாதார அமைச்சின் பயிற்சியாளர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்தில் சிக்கியதில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.