Skip to main content
பல கட்டுப்பாடுகளில் மலேசிய எரிபொருள் கப்பல்கள் !

 

ஈரான் Hormuz நீரிணையில் இருந்து புறப்பட்ட மலேசியாவின் இரண்டு எரிபொருள் கப்பல்கள், பல கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளதாக, பிரதமர் தெரிவித்துள்ளார் !

கட்டுப்பாடுகளைக் கடந்து மலேசியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிப்பதற்காக, ஈரான் அரசாங்கத்துடன், மலேசிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக Datuk Seri Anwar Ibrahim கூறினார்.

ஈரான் அரசாங்கம், குறிப்பாக அந்நாட்டின் அதிபர், மலேசியக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய உடனேயே, இந்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை விரைவாக முன்னெடுக்கப்படும், என்றாரவர்.

------------

மேற்காசிய நாடுகளில் நிகழ்ந்து வரும் மோதலால் ஏற்படும் தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, தனியார் நிறுவனங்கள், நெகிழ்வான வேலை முறைகளை பரிசீலிக்க வேண்டும் !

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், செலவினச் சுமையைக் குறைக்கவும் அது அவசியமாவதாக, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

செலவீனங்கள் அதிகரித்து வருவதால், தனியார் நிறுவன முதலாளிகள், தங்கள் வேலை முறைகளை நிர்வகிப்பதில்,  அதிக நெகிழ்வுத்தன்மையுடனும், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

----------

சிலாங்கூர் ஷா அலாம் மாநகர மன்ற வாகனத்தில் இருந்து சிகிரெட் துண்டை வீசுயதாகக் கூறப்படும் அதன் ஊழியர், ஒழுங்கு நடவடிக்கையும், சமூக சேவை தண்டனையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது !

அவர் சிகிரெட் துண்டை வீசும் காட்சிகள் அடங்கிய காணொலி, சமூக வலைத்தளங்களில் பரவலானது.

---------

ஜொகூர் கோத்தா திங்கி உணவகத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக பேர்வழி, அடுத்த வார திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது !

அச்சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர்.

----------

பேராக் ஈப்போ இரவுச் சந்தையில், கார் மேற்பரப்பு பளபளப்பாக்கும் மருந்து கட்டணம் தொடர்பான தகராறைத் தொடர்ந்து, காரொன்றின் முன் இருக்கை கண்ணாடியைக் கல்லால் அடித்து உடைத்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார் !

RAAGA Aaha Siranta Isai!