Skip to main content
பல்கலைக்கழகம், கல்லூரிகள் சட்டம் ரத்து !

 

1971-ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டத்தை, அரசாங்கம் ரத்து செய்யவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார் !

பல்கலைக்கழக மாணவர்களின் நலனுக்காக, அந்தச் சட்டத்தில் இதற்கு முன்னர் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தது.

ஆயினும், இன்னும் சில அம்சங்கள் மாணவர்களுக்கு திருப்திகரமாக இல்லை என, Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

அச்சட்ட அதிருப்தியின்மை குறித்து, சில மாணவர்கள் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, AUKU சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது, என்றாரவர்.

--------

உயர்கல்வி நிறுவனங்களில் பயில வாய்ப்பு கிடைத்த மாணவர்கள், எந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், கல்வியை பாதியிலேயே நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து பயில வேண்டும் !

நிதி உள்ளிட்ட ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக உயர்கல்வி அமைச்சர் தொடர்புக்கொள்ளலாம் என Datuk Seri Dr Zambry Abdul Kadir தெரிவித்துள்ளார்.

இல்லையெனில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை அணுகலாம் என அவர் கூறினார்.

மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனங்களில், கட்டாயம் பதிவு செய்து, கல்வியைத் தொடர்வதை, அவ்வமைச்சு உறுதிச் செய்யும்.

இதனிடையே, இவ்வாண்டு 20 அரசுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளில் பயில, 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

----------

இந்தோனேசியாவில், 29 கிலோகிராம் போதைப்பொருளுடன் சிக்கிய மலேசிய விமானி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சோதனைகளைத் தாண்டிச் செல்ல, தனியாகச் செயல்பட்டுள்ளார் !

ஆரம்பக்கட்ட விசாரணையில் அது தெரியவந்துள்ளதாக, புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.

KLIA-வில் சோதனைகளைத் தாண்டிச் செல்ல, விமானிக்கு, விமான நிலையத்திற்குள் இருந்த எந்தவொரு நபரின் உதவியும் கிடைக்கவில்லை என, போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை கூறியது.

எனினும், விமான நிலையத்தில் சோதனைகளைத் தாண்டிச் செல்ல சந்தேக நபர் பயன்படுத்திய முறையை தற்போது வெளியிட முடியாது என்றும், அது விசாரணையைப் பாதிக்கக்கூடும் என்றும் அத்துறை சொன்னது.

---------

பஹாங் குவாந்தானில், 2 வீடுகள் தீக்கிரையானதில், கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் என, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர் !

----------

மற்றொரு பக்கம் TEMERLOH-வில், சுமார் 32-ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றிச் சென்ற, டேங்கர் லாரி ஒன்று கார் மீது மோதியதில், காரில் பயணித்த தாயும், மகனும் உயிரிழந்தனர் !

----------

இந்தோனேசியா Flores தீவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !

RAAGA Aaha Siranta Isai!