
மாணவர்களின் நடவடிக்கைகளை கவனிப்பதிலும் அவர்களுக்கு வழிகாட்டுவதிலும் பொது பல்கலைக்கழக நிர்வாகங்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்!
மாணவர்களின் படைப்பாற்றல் வெளிப்பாடு பொதுமக்களின் உணர்வுகளுக்கு உட்பட்ட வரம்புகளுக்குள் இருப்பதை உறுதி செய்ய அது அவசியமாவதாக, உயர்கல்வி அமைச்சு வலியுறுத்துகிறது.
இதற்கு அண்மையில் பல்கலைக்கழகம் ஒன்றில் நிகழ்ந்த சம்பவமே இதற்கு ஒரு சான்று என அவ்வமைச்சு குறிப்பிட்டது,
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் மேடை நாடக போட்டியின் போது, ஒரு குழு முகம் சுழிக்கும் விதமான, ஆபாச சைகைகள் கொண்ட படைப்பை வெளிப்படுத்தியது பெரும் சர்ச்சையானது.
------
இதனிடையே அவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து உயர்கல்வி அமைச்சு புகாரைப் பெற்றுள்ளது!
அச்சம்பவம் தொடர்பில் நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகம் உத்தரவாதம் அளித்தது.
-----
Hormuz நீரிணையைக் கடந்துள்ள மலேசியாவின் இரண்டாவது எண்ணெய் கப்பல், இவ்வார இறுதிக்குள் நாடு வந்து சேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!
ஒரு மில்லியன் லிட்டர் கச்சா எண்ணெயை சுமந்து வரும் அக்கப்பல், மலேசியாவின் வியியோக பாதுகாப்பை வலுப்படுத்தும் என தொடர்புத்துறை அமைச்சர் கூறினார்.
இம்மாதம் 17ஆம் தேதி முதல் எண்ணெய் கப்பல் மலேசியா வந்து சேர்ந்தது.
------
கிள்ளான் பள்ளத்தாக்கின் Shah Alam, Sungai Buloh மற்றும் காஜாங் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் சில சாலைகளில் போக்குவரத்து தடை பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
அண்மைய போக்குவரத்து நிலவரங்களுக்கு Astro Audio Traffic சமூக ஊடகங்களை வலம் வாருங்கள்.
----
கிளாந்தான், Machang, Kuala Krai, Pasir Mas, Tanah Merah, Jeli, Perlis, Kedahவில் Padang Terap, Pokok Sena மற்றும் Kubang Pasuவில் முதல் நிலை வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-----
இந்தியா உதம்பூரில் மலைப்பகுதியொன்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் பலியாகினர்.
33 பேர் காயமடைந்துள்ளதாக அண்மைய தகவல் கூறுகிறது.
இதனிடையே அவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம்ஜ் ரூபாயும், காயமடைந்தவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரிங்கிட்டும் இழப்பீடாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
-----
வடக்கு ஜப்பானை ரிக்டர் அளவையில் 7.5ஆகப் பதிவாகிய வலுவான நிலநடுக்கம் உலுக்கியிருக்கிறது!
அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.