
சிலாங்கூர் பந்திங் உள்ள இடைநிலைப்பள்ளியில், சக மாணவியைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் மாணவியின் உடல்நிலை குறித்து, ஊகங்களைப் பரப்ப வேண்டாம் !
மலேசிய மனித உரிமை ஆணையம் அவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சந்தேகநபர் மதியிறுக்கம் கொண்டவர் என அவரது வழக்கறிஞர் தெரிவித்ததாக வெளியான ஊடகச் செய்திகளை, SUHAKAM சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பரப்பப்படும் ஊகங்கள், விசாரணையை பாதிக்கக்கூடும்.
இதனால், அந்த குறைபாடுள்ளவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையும், சமூகத்தில் ஏற்படுத்தக்கூடும் என அது எச்சரித்துள்ளது.
அதே வேளை, அச்செயலைப் புரிந்ததாகக் கூறப்படும் மாணவியும், பாதிக்கப்பட்ட மாணவியும், சிறுவர்கள் என்பதால், அவ்விருவரின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அது வலியுறுத்தியது.
நேற்று காலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், உடம்பில் பல பகுதிகளில் காயமுற்ற பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை, சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்செயலை செய்ததாகக் கூறி கைதான 15 வயது மாணவி, 4 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படுகிறாள்.
-----------
ஜொகூர் தேர்தலுக்காக, சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு, அங்கிருந்தபடியே வாக்களிக்க சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உதவி கோரும் திட்டம், மலேசிய அரசாங்கத்துக்கு இல்லை !
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim, மக்களவையில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக, சிங்கப்பூரில் உள்ள முதலாளிகள், மலேசிய ஊழியர்கள் தாயகம் திரும்பி, தங்கள் வாக்கைச் செலுத்த தேவையான வசதிகளையும் அனுமதியையும் வழங்க வேண்டும் என்பதை மட்டுமே, அரசாங்கம் ஊக்குவிக்க முடியும், என்றாரவர்.
--------
இதனிடையே, அம்மாநிலத்தில் இன்று முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறுள்ளது !
தற்போது வரையிலான நிலவரப்படி, காவல் துறை மற்றும் ராணுவ வீரர்கள், அவர்களது துணைகள் என, இதுவரை 92.86 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக, தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
---------
இவ்வேளையில், அம்மாநிலத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறும் தேர்தலின் முடிவுகள், அன்றிரவு 10 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது !
-------
சிலாங்கூர் பூச்சோங்கில், கடந்த மார்ச் மாதம், Cikgu Chandra-வின் மூன்று கார்களை தீ வைத்து எரித்ததாக நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, 3 ஆடவர்கள் மறுத்துள்ளனர் !