
பள்ளிகளில் நிகழும் பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகளை மறைக்காதீர்!
பள்ளியின் நற்பெயரைப் பாதுகாக்க நிர்வாகங்கள் செய்யும் இத்தவறு, அதிகாரிகள் தங்களின் கடமையை செய்ய தடையாக அமையக்கூடும் என, தேசிய காவல் படை தலைவர் கூறியிருக்கிறார்.
அரச மலேசிய காவல் படைக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்பட்டு, அதன் மூலம் எம்மாதிரியான சம்பவங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பள்ளிகளில் பாதுகாப்பை நிலைநாட்ட வேண்டியது ஒரு கூட்டு முயற்சி; காவல் துறை, பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என எல்லா தரப்புக்கும் இதில் பங்குண்டு என்றார் அவர்.
-----
இவ்வாரம் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2027 வரவு செலவு திட்டத்தில், பொது சுகாதாரமும் முக்கியத்துவம் பெறும் என, சுகாதார வல்லுனர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
மருத்துவமனைகள் என பொதுவாக மட்டுமின்றி, சுகாதார கிளினிக்குகளுக்கு போதிய ஒதுக்கீடுகள் தேவை என மருத்துவ அதிகாரி ஒருவர் Astro Audio செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.
2027 பட்ஜட்டை பிரதமர் வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.
------
சிலாங்கூர், Petaling Jaya நாடாளுமன்றத்தில் இடைதேர்தல் நடத்தப்படாது!
மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, காலியான அந்நாடாளுமன்ற இருக்கையை நிறப்பட வேண்டிய அவசியம் இல்லை என, மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத்தின் உறுப்பினர், கடந்த வெள்ளிக்கிழமை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்தார்.
-----
கடந்த ஜூன் மாதம் வரை, நாட்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை பித்தர்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளனர்!
ஆவற்றுள் ஆக அதிகமாக திரங்காணு, கிளாந்தான், கெடா மற்றும் பெர்லிசில் அவ்வெண்ணிக்கை கவலையளிக்கும் விதமாக இருப்பதாக, உள்துறை அமைச்சு தெரிவித்தது.
-----
நாட்டில் ஆகக் கடைசி தகவல்படி 15 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.
ஜொகூர், KL, Putrajaya, பஹாங், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.