
தேசிய புகைமூட்ட நடவடிக்கை திட்டத்தின் அடிப்படையில் பள்ளி செயல்பாட்டு நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் பணியை கல்வி அமைச்சு தொடக்கியுள்ளது!
அதன் மூலம் அண்மைய காற்றுத் தர நிலவரத்தைப் பொருத்து, பள்ளிகளை மூடும் முடிவுகள் இன்னும் நேர்த்தியான முறையில் எடுக்கப்படும் என, கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறைகளின் கீழ், API குறியீஉ நூரைக் கடந்துள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் புற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது.
200ரைக் கடக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்றார் அமைச்சர்.
------
இதனிடையே புகைமூட்டத்தால் மூடியிருந்த சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் பஹாங்கில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன!
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, சுவாசக் கவசம் அணிந்து வர ஊக்குவிக்கப்படுகின்றனர்.
KLலிலும் இன்று பள்ளிகள் மீண்டும் வழக்கம் போல் செயல்படுகின்றன.
------
ஆகக் கடைசி தகவல்படி நாட்டில் 34 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கின்றது!
சிலாங்கூர், ஜொகூர், KL, Putrajaya, மலாக்கா, நெகிரி செம்பிலான், பேராக், பினாங்கு, பஹாங் என, கிட்டத்தட்ட தீபகட்பத்தின் எல்லா மாநிலங்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன.
மிக மோசமாக கிள்ளான் மற்றும் ஜொஹான் செத்தியாவில் API குறியீடு 190ரைக் கடந்துள்ளது.
------
53 ஆயிரம் taxi, வாடகை கார், பள்ளி பேருந்து ஓட்டுனர்கள், ஒரே தடவையாக ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகையைப் பெறவிருக்கின்றனர்!
PSV எனப்படும் பொதுச் சேவை வாகன உரிமம் வைத்திருக்கும் எல்லா ஓட்டுனர்களும் நேரடியாகவே இதற்குத் தகுதிப் பெறுவர்.
------
தீபகட்பத்தில் இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு, ன்97 மற்றும் உதவித் தொகை வழங்கப்படாத ரோன்95 ரக பெட்ரோல் விலை முறையே ஐந்து சென் சரிகிறது!
உதவித் தொகை வழங்கப்படாத டீசல் விலை பத்து சென் குறைந்துள்ளது.