
இவ்வாண்டு நாடு முழுவதும் 333 விடுதியுடன் கூடிய பள்ளிகளில், CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன !
பகடிவதைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், மாணவர்களின் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், அந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
அதற்காக, கூடுதலாக 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதிகளில் மாணவர்களைக் கண்காணிக்க, குறிப்பாக இரவு நேரங்களில், ஏப்ரல் முதல் 300 MySTEP விடுதி கண்காணிப்பு உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக, அமைச்சு மேலும் கூறியது.
இதனிடையே, புகார் அளிப்பவர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையில், கல்வி அமைச்சின் பகடிவதை புகார் இணையத்தளத்தில், பெயர் குறிப்பிடாமல் புகார் அளிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
---------
மருந்துகளை இலவசமாக அஞ்சல் மூலம் விநியோகிக்கும் புதிய சேவை தொடர்பான மோசடிகள் குறித்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, தொடர்புத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது !
குறிப்பாக முதியவர்கள், Ubat Melalui Pos எனும் திட்டத்திற்கான பதிவு தொடர்பில், அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் பணம் வசூலிப்போர் அல்லது பதிவு செய்து தருவதாகக் கூறுவோரிடம், ஏமாற வேண்டாம் என அமைச்சு அறிவுறுத்தியது.
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் மருந்துகள் இலவசமாக அஞ்சல் மூலம் அனுப்பப்படும் நிலையில், UMP திட்டத்திற்கான பதிவை, சுகாதார அமைச்சின் நிலையங்கள் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படும்.
அதற்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது.
---------
Negeri Sembilan Kuala Pilah-வில், பள்ளி விடுதியில் இரண்டாம் படிவ மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மேலுமொரு நான்காம் படிவ மாணவர் கைதாகி, 6 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் !
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் முதல் சந்தேக நபரும், நான்காம் படிவ மாணவராவார்.
---------
சிலாங்கூர் செப்பாங்கில், அடையாளம் காணப்படாத லாரியின் பின்னால், மோட்டார் சைக்கிள் மோதியதில், கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர் ; அவர்களது 7 வயது மகன், பெற்றோரை இழந்து தவிக்கின்றான் !
--------
தொலைகாட்சி மற்றும் வானொலியில் செய்தி வாசிக்கும் கனவுடைய மாணவர்களுக்காக, Astro உலகம் ஏற்பாட்டில் தொடங்கியுள்ளது, இளம் செய்தி வாசிப்பாளர் தேடல் !
5 முதன்மை வெற்றியாளர்களுக்கு, தலா ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுடன், Astro செய்திகள் மற்றும் Astro Audio செய்திகளில், செய்தி வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்,
வெற்றியாளர்களுக்கு, Astro செய்திகள் மற்றும் Astro Audio செய்தி வாசிப்பாளர்களை, நேரில் சந்திக்கும் வாய்ப்பும் உண்டு.
8 முதல் 12 வயதுக்குட்பட்ட தமிழ்ப்பேசும் மாணவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், மேல் விவரங்களுக்கும், Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வரலாம்.