Skip to main content
போக்குவரத்து சட்டத்தின் கீழ் மரண தண்டனையை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை !

மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டும் குற்றங்களுக்கு, சாலைப்போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மரண தண்டனையை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. 

 

நடப்புச் சட்டங்களில், குறிப்பாக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் போக்குவரத்து குற்றங்களைத், கொலைச் சம்பவமாக வகைப்படுத்தி தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின் கீழ் விசாரிக்க முடியும் என விளக்கமளித்துள்ளார் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke. 

நாட்டில் பல கடுமையான குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.  

-- 

நாடு முழுவதும் உள்ள நான்காயிரம் பெட்ரோல் நிலையங்களில், எல்லைப் பகுதிகளில் உள்ள 170 க்கு மட்டுமே அதிக கண்காணிப்பு தேவைப்படுவதாக, உள்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார். 

எரிப்பொருள் கசிவுகளைத் தடுக்கவும் அரசாங்க மானியங்களின் தவறானப் பயன்பாட்டை தவிர்க்கவும் அது வகைச் செய்யும் என அவர் கூறினார். 

-- 

சிலாங்கூர், சுங்கை பூலோ சிறைச்சாலையிலிருந்து கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானிய விசாரணைக் கைதி ஒருவர் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடக்கியுள்ளது. 

  

அச்சம்பவத்தில் அலட்சியக் கூறுகள் அல்லது விதிமீறல்கள் நிகழ்ந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

 

-- 

தன் மடியில் பெண் ஒருவர் அமர்ந்திருக்க பேருந்தை இயக்கியதாகக் கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலான விரைவுப் பேருந்து ஓட்டுநர், உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

  

இது போன்ற சம்பவங்களைத் தடுக்க, இனி ஓட்டுநர் மற்றும் பேருந்தின் உட்புறத்திலும் கண்காணிப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக, சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

-- 

 

கிளந்தான் , Kota Bahru-வில் பள்ளிவாசல் அருகே இரு மாணவர்கள் மீது காரை மோதியதாகக் கூறப்படும் ஆசிரியர், இரண்டு நாட்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

 

அச்சம்பவத்தில் 13 வயது மாணவி ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். 

 

-- 

 

RAAGA Aaha Siranta Isai!