Skip to main content
போதை பொருள் கடத்தலுக்கு இடமில்லை!

 

 

பாதுகாப்புப் படையினரை உட்படுத்திய எந்தவொரு போதை பொருள் கடத்தல் அல்லது ஊழலுக்கும், அரசாங்கம் இடமளிக்காது!

இவ்விவகாரம் கடுமையாகக் கையாளப்படாவிடில், தேசிய பாதுகாப்புக்கே இது அச்சுறுத்தலாக விளங்கும் என, பிரதமர் எச்சரித்துள்ளார்.

போதை பொருள் கடத்தலுக்காக ராணுவ வசதிகளைத் தவறாகப் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில், முன்னதாகக் கைதான 11 பேரில் ஐந்து வான்படை அதிகாரிகளும் இருப்பதை அடுத்து பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.

ஜூலை மாதத்திலிருந்து செயல்பட்டு வரும் அக்கும்பல், போதை பொருளை தீபகட்பத்திலிருந்து சபாவிற்குக் கொண்டுச் சென்று, பின்னர் Philipines மற்றும் இந்தோனேசியாவுக்கு விநியோகிப்பது விசாரணையில் அம்பலமானது.

------

அரச மன்னிப்பு வாரியத்தின் அசல் ஆவணங்கள் ரகசியமானவை என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவை வெளியிடப்படுவது புதிதல்ல!

நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்போது, இதுபோன்ற ஆவணங்கள் வெளியிடப்படுவது வழக்கமே என, பிரதமர் DSAI கூறியுள்ளார்.

DS Najib Razakகின் வீட்டுக் காவல் தொடர்பில் விவாதிக்கப்பட்ட மனிப்பு வாரியக் கூட்டத்தின் குறிப்புகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

-----

இதனிடையே நாடாளுமன்ற விவாதத்தின் போது தனது உரையில் முறையற்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு, பொதுப் பணி துணை அமைச்சர் Datuk Seri Ahmad Maslan கேட்டிருந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார் பிரதமர்!

அரசியல் அழுத்தங்கள் சில சமயங்களில் இம்மாதிரியான சூழலை உண்டாக்குவது இயல்பே.

என்றாலும் அரசாங்க விவகாரங்கள் என வரும்போது, ஒழுக்கமும் கண்ணியமும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் நினைவூட்டினார்.

------

KLலில் 2022ஆம் ஆண்டில் 30ஆக இருந்த வெள்ளம் ஏறும் அபாயம் உள்ள இடங்களின் எண்ணிக்கை, தற்போதி 14ஆகக் குறைந்துள்ளது!

ஆண்டிறுதிக்குள் அதனை பத்தாகக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மழை நீர் சேகரிப்பு நிர்வகிப்பை மேம்படுத்துதல், வெள்ள மேலான்மையை சீர்ப்படுத்துதல் உள்ளிட்ட தனிப்பு நடவடிக்கைகளின் மூலம் அது சாத்தியப்படும் என்றார் அவர்.

------ 

ஆகக் கடைசி தகவல்படி நாட்டில் ஈராயிரத்து எண்ணூரு பேர் வெள்ளத்தால் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் சிலாங்கூர், பேராக், பஹாங், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் உள்ளனர்.

RAAGA Aaha Siranta Isai!