
போதைப்பொருள் கலந்த வேப் பிரச்சினையை சமாளிக்க விரைவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்படவுள்ளன !
இந்த நடவடிக்கைகள் தற்போது விரிவாகத் தயாராகிக் கொண்டிருப்பதாக, சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுவையை மாற்றக்கூடிய வசதியுடைய வேப் சாதனங்கள், போதைப்பொருள் போன்ற, தடைசெய்யப்பட்ட பொருட்கள் கலந்து, தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதே அதற்குக் காரணம்.
முன்னதாக, KKM, சிறப்பு பணிக்குழுவை அமைத்து, வேப் தொடர்பான சட்டம் மற்றும் சுகாதார விளைவுகளை ஆய்வு செய்தது.
சந்தையில் போதைப்பொருள் கலந்த வேப் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக புகார்கள் வந்ததால், இந்த பிரச்சினை பெரும் கவலையை ஏற்படுத்தியது.
---------
வேலை இடங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கொள்கை அணுகுமுறை, உடல் பாதுகாப்பை மட்டும் குறிக்கவில்லை !
அது, பணியாளர்களின் மனநலம் மற்றும் உளவியல் நலன் ஆகியவற்றையும் முக்கியமாகக் கருத வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பணியாளர்களின் மனநலம் இரண்டாம் நிலை பிரச்சினை எனக் கருதப்படக் கூடாது என, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
--------
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, நாளை பிரதமர் Datuk Seri Anwar Ibrahim, இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது !
நாளை தொடங்கி, Negeri Sembilan X Park Sendayan-னில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்ச்சியை, Datuk Seri Anwar அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.
---------
சிலாங்கூர் கிள்ளானில், மது போதையில் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் காரோட்டுநர், நாளை வரை தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார் !
அந்த காரோட்டுநர், 3.5 கிலோமீட்டருக்கு, போக்குவரத்துக்கு எதிராக வாகனத்தைச் செலுத்தி, மோட்டார்சைக்கிளை மோதித் தள்ளியதில், அதைச் செலுத்திய நபர் கடும் காயத்திற்குள்ளாகி, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
----------
இதனிடையே, ஜொகூர் BATU PAHAT-டில் மதுபோதையில் வாகனமோட்டியதாக, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, 59 வயது நபர் மறுத்துள்ளார் !