
சிலாங்கூர், கிள்ளானில் போதை பொருள் மற்றும் மது போதையில் இருந்ததாக நம்பப்படும் கார் ஓட்டுனர் மீது, கொலை குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது கிள்ளான் Majistrate நீதிமன்றம்!
அந்த 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் போதையில் கவனக்குறைவாக வாகனமோட்டி, எதிர்திசையில் வந்த மோட்டார்சைக்கிளோட்டியை மோதிய காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகத்தில் பரவியது.
சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
-----
இதனிடகியே மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி, உயிரிழப்புகளை ஏற்படுத்தும் போக்குவரத்துக் குற்றங்களை கையாள்வதற்கு புதிய சட்ட திருத்தங்கள் தேவைப்படலாம் !
அவ்வாறு சட்ட துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிள்ளானில் பதிவான விபத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
எனவே, கடுமையான தண்டனைகள் குறித்த முன்மொழிவுகளும் பரிந்துரைகளும் தொடர்புடைய அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அத்துறை கூறியது.
-
Kelana Jaya LRT வழித்தடத்தில் இன்று காலை ஏற்பட்ட போக்குவரத்துத் தடை, தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ஏற்பட்டதே!
Rapid KL நிறுவனம் அதனை உறுதிப்படுத்திதுக்கிறது.
பிரச்னை சரிச் செய்யப்பட்டுவிட்டது; என்றாலும் செயல்பாட்டில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பதால், பயணிகளின் காத்திருப்பு நேரம் அதிகமாக இருப்பதாக அது கூறியது.
-
சிலாங்கூர், கிள்ளானில் ஓடிக் கொண்டிருக்கும் trailer லாரியின் பின்புறம் தொங்கிக் கொண்டு வந்த நபரைக் காவல் துறை தேடி வருகிறது.
அந்நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு அழைக்கப்படுகின்றனர்.
-
மின்சார கட்டணம் உயருவதாக சமூக ஊடகங்களில் பொய்ச் செய்தியைப் பரப்பிய சந்தேகத்தின் பேரில், மூவர் மீது விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம்.
-
கெடாவில், Baling, Sik, Padang Terap, Pokok Sena , Kota Setar ஆகிய பகுதிகளில் வெப்ப நிலை கட்டுபாட்டிலே இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.