Skip to main content
பொது உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு நற்செய்தி !

 

பொது உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு, உயர்கல்வி அமைச்சு நற்செய்தியை அறிவித்துள்ளது !

குறிப்பாக, பின்னடைந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மலிவான உணவுகளை வழங்கும் நோக்கில் “Menu Kasih Siswa” திட்டத்தை, அமைச்சு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதற்காக 26 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர்  Datuk Seri Dr Zambry Abdul Kadir கூறினார்.

அதே வேளை, தனியார் பல்கலைக்கழகங்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் விலை மலிவாக இருக்கும் வகையில், அமைச்சுடன்  இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

மேலும், உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு எவ்வாறு சிறப்பாக உதவிகளை வழங்குவது என்பது குறித்து, மாணவர் அமைப்புகளுடன், அவ்வமைச்சு தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

-----------

Syed Saddiq ஊழல் வழக்கு தொடர்பான கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜூன் மாத இறுதியில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது !

குற்றவியல் நம்பிக்கை மீறல், முறைகேடு, பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து, அந்த முவார் நாடாளுமன்ற உறுப்பினரை விடுவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

--------

இவ்வாண்டின் முதல் காலாண்டு வரை, 43-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோசடி தொடர்பான சமூக ஊடக உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன !

அதனை அகற்றக் கோரி வந்த MCMC-யின் விண்ணப்பங்களுக்கு ஏற்ப, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, தொடர்புத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

---------

மற்றொரு நிலவரத்தில், இன்று வரை, மலேசிய ஊடக மன்றத்துக்கு, முறையற்ற புகைப்படங்கள் பயன்பாடு தொடர்பாக மொத்தம் 7 புகார்கள் கிடைத்துள்ளதாக, தொடர்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது !

இந்த புகார்கள், செய்தி வெளியீட்டின் துல்லியம், அனுமதியின்றி படங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சமூக ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கம் போன்ற விவகாரங்களை உட்படுத்தியதாகும் என அமைச்சு கூறியது.

----------

கெடா ALOR STAR-ரில், ஒருவர் மற்றொருவரை குத்தி தாக்கும் சம்பவம் தொடர்பான பரவலான காணொலி குறித்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது !

அந்த காணொலியில், சிலருடன் வந்த ஒருவர் பாதிக்கப்பட்ட நபரை குத்தி தாக்கி கீழே விழச் செய்வது பதிவாகியுள்ளது.

RAAGA Aaha Siranta Isai!