Skip to main content
பொதுச் சேவை துறையினரிடையே மோசமாகும் திவால்!

 

 

 

நாட்டில் இவ்வாண்டு பொதுச் சேவை ஊழியர்களை உட்படுத்தி பதிவான திவால் சம்பவங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே தனிநபர் கடனை உட்படுத்தியவையே! 
 

சிலர் 40 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் கடன் வைத்திருப்பதாக திவால்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

 

இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் 200 பொதுச் சேவை ஊழியர்களை உட்படுத்திய திவால் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன, 

 

அவற்றுள் 197, தனிநபர் கடன் மற்றும் இதர சுய கடன்களை உட்படுத்தியவை என, சிலாங்கூர் திவால்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

 

------ 

  

லங்காவியில் காவல் துறை அதிகாரி ஒருவரை உட்படுத்தியதாகக் கூறப்படும் போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை! 

 

சம்பந்தப்பட்ட அதிகாரியின் வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றில் திடீர் சோதனை நடத்தியது உட்பட, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அவ்வாறு தெரிவித்துள்ளது கெடா காவல் துறை. 

 

முன்னதாக லங்காவில் பிடிப்பட்ட மிகப்பெரிய போதை பொருள் விநியோக கும்பலைச் சேர்ந்த சிலர் பிடிப்பட்ட நிலையில், இதற்குப் பின்னால் காவல் வீரர் ஒருவரின் திட்டங்கள் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது. 

 

-------  

 

நெகிரி செம்பிலான், சிரம்பானில் ஏழு மாத குழந்தை உயிரிழந்தது தொடர்பில் கைதான 38 வயது மாது ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

 

----- 

  

திரங்காணுவில் பணச்சலவை விசாரணை என்ற பேரில் தம்மை தொடர்புக் கொண்ட நபரை நம்பி, இல்லத்தரசி ஒருவர் ஏழரை லட்சம் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார். 

 

------

நெகிரி செம்பிலானில் 14 வயது மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக ஆசிரியை ஒருவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

---- 

 

கெடா, Balingகில் மற்றவர்களுடைய Mykad அடையாள அட்டையைப் பயன்படுத்தி உதவித் தொகை வழங்கப்பட்ட புடி95 எண்ணையை வாங்கிய 53 வயது நபர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

 

RAAGA Aaha Siranta Isai!