
நாட்டின் Creative economy எனப்படும் படைப்பாற்றல் பொருளாதாரத்திற்கு நல்ல எதிர்காலம் இருப்பதை பார்க்க முடிகிறது!
எனவே அதனை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் 2027 வரவு செலவு திட்டத்தில் 130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருப்பது, நல்ல தாக்கத்தை உண்டாக்கும் என பெரிதும் நம்புவதாகக் கூறியுள்ளார் தொடர்புத்துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil.
நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் பகுதியாக இருக்கும், திரைப்படம், அனிமேஷன், மின்னியல் விளையாட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இத்துறை வளர்ச்சி, மேம்பாடு மற்றும் ஏற்றுமதிக்கு எளிதாக இருக்கும் என்றும், அமைச்சர் Agenda Awani நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
முழுமையான செய்திக்கு astroawani.comமை நாடலாம்.
-----
சூப்பர் எல் நினோ பருவமழைக்காலத்தை எதிர்கொள்ள தேவையான ஆயத்த வேலைகளை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தொடக்கியுள்ளது!
நீண்ட கால வரட்சி, உணவு விநியோகத்திற்கு இடையூறாக அமையலாம் என்பதால், அணைக்கட்டுகளின் அளவுகள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
அமைச்சு சார்ந்த நிறுவனங்களுக்கு இடையிலான ஆயத்த வேலைகளும் தொழில்நுட்பத்துடன் இணைந்து முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
------
தடுப்புக் காவலில் இருந்த கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சுயாதீன காவல்துறை நடத்தை ஆணையம் விசரணையைத் தொடக்கியிருக்கிறது!
அவரது மரணத்தில் குற்றச்செயல்கள் ஏதேனும் இருக்கின்றதா என்ற கோணத்தில் ஆராயப்படுகிறது.
------
Tuas சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் ஏழு லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதை பொருளை கடத்த முயன்ற 24 வயது மலேசிய ஆடவன் பிடிப்பட்டுள்ளான்.
அவனது மோட்டார் சைக்கிளில் இருந்து மொத்தமாக ஏறக்குறைய இரண்டு கிலோகிராம் எடையிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.