Skip to main content
பட்ஜட் 2027: சம்பள உயர்வுக்குப் பிரகாசமான வாய்ப்பு!

 

2027 வரவு செலவு திட்டத்தில் சம்பள மறுசீரமைப்பு குறித்த அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!

 

ஆயிரத்து எழுநூரு ரிங்கிட் அடிப்படை மாதச் சம்பளமானது, ஈராண்டுகளுக்கும் மேல் அமுலில் இருக்கும் நிலையில், அந்த எதிர்ப்பார்ப்பு மலேசியர்களிடையே இருக்கிறது என, பொருளாதார வல்லுனர் Dr. Mohd Afzanizam Abdul Rashid தெரிவித்துள்ளார்.

 

என்றாலும் சம்பளத்தை உயர்த்துவது, வர்த்தகம் சார்ந்த முடிவு; அதனை ஒரே சீராக உயர்த்திவிட முடியாது என்றும், திறன், அனுபவம், தேவை ஆகியவற்றைப் பொறுத்து, முதலாளிகள் முடிவுச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கருத்துரைத்தார்.

 

மேலும் உயர் திறன் கொண்ட உள்ளூர் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் தொழில்துறை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறும் வகையில், அதிகாரத்துவத்தையும் சட்ட இணக்கச் செலவுகளையும் குறைத்து, வணிகத் துறைக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் Dr Afzanizam வலியுறுத்தினார். 

 

2027 பட்ஜட்டை பிரதமரும் நிதியமைச்சருமான DSAI வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தி தாக்கல் செய்யவிருக்கிறார்.

 

------

 

ஜொகூர், Yong Peng பள்ளி மாணவி மரணத்தில் சம்பந்தப்பட்ட எந்த தரப்பும் தப்ப முடியாது!

 

அச்சம்பவத்தில் குற்றவியல் அம்சங்கள் கண்டுபிடிக்கப்படுமாயின், அதற்குப் பொறுப்பானவர் தக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் கல்வி அமைச்சர் Fadhlina Sidek.

 

அவ்விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு, காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என அவர் உறுதியளித்துள்ளார்.

 

ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளியின் பாதுகாப்பு நிறுவனத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

முன்னதாக 16 வயதான அம்மாணவி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், காவல் துறை மூன்று 16 வயது மாணவர்களைக் கைது செய்துள்ளது.

 

ஒரு மாணவன் ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

 

-----

 

பெர்லிசில் பாலியல் தொந்தரவு கொடுத்த சந்தேகத்தின் பேரில் மீண்டும் கைதாகியிருக்கிறார் தன்னார்வ பேச்சாளர் ஒருவர்! 

 

முன்னதாக அதே குற்றச்சாட்டு தொடர்பில் கைதான அந்நபரின் தடுப்புக் காவல் நேற்று நிறைவுற்றது.

 

------

 

சிலாங்கூர், KL, Putrajaya, Johor, Negeri Sembilan-னில் எட்டு இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.

 

------

 

தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்தி வாசிக்கும் கனவுடைய எட்டு முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக Astro உலகம் ஏற்பாட்டில் தொடங்கியுள்ளது இளம் செய்தி வாசிப்பாளர் தேடல்!

 

ஐந்து முதன்மை வெற்றியாளர்களுக்குத் தலா ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுடன், Astro செய்திகள் மற்றும் Astro Audio செய்திகளில் செய்தி வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்; தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் உண்டு.

 

விண்ணப்பத்திற்கும், மேல் விவரங்களுக்கும் Astro ulagam அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

RAAGA Aaha Siranta Isai!