
2027 வரவு செலவு அறிக்கை தாக்கலுக்கான ஆயத்த வேலைகள் இறுதி கட்டத்தில் இருக்கின்றன!
நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்துப் பறிமாற்று நடவடிக்கைகளும் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாக, இரண்டாவது நிதியமைச்சர் Datuk Seri Amir Hamzah Aziza தெரிவித்தார்.
பல்வேறு தரப்புகளின் கருத்துகளைப் பெற்று அவற்றை 2027 பட்ஜட்டில் சேர்த்துக் கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சி தீவிரமாகி வருவதாக அவர் கூறினார்.
கூடுதல் பரிசீலனை தேவைப்படும் முன்மொழிவுகளும் கருத்துக்களும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அமைப்புகளால் ஆராயப்படும் என்றார் அவர்.
------
இரு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக மால்தீவ்ஸ் சென்று சேர்ந்துள்ளார் பிரதமர் DSAI!
1968ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய இருதரப்பு உறவை வலுப்படுத்தும் முயற்சியாக அந்த பயணம் அமைகிறது.
------
இவ்வாண்டின் இறுதிக்குள், ஒருங்கிணைந்த நுரையீரல் சுகாதார அணுகுமுறையைச் செயல்படுத்தக்கூடிய தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நாடு முழுவதும் கொண்டிருக்க சுகாதார அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.
நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் உயிரிழப்பு ஏற்படுவதற்கும் முக்கியக் காரணமாக விளங்கும் முதல் மூன்று விஷியங்களில் நுரையீரல் நோய்களும் ஒன்றாக இருப்பதால், இத்தகைய தீவிரமான அணுகுமுறை அவசியமென அது விளக்கியுள்ளது.
------
Tabung Hajiயின் அரச மன்னிப்பு வாரியம் குறித்த வழக்கின் கீழ், இன்று மேலும் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது!
முன்னாள் துணை தலைமை நிர்வாகி மற்றும் முன்னாள் திட்ட நிர்வாகியான அவ்விருவரும் இன்று காலை மணி 8.30ரை மணி வாக்கில் நீதிமன்றம் கொண்டுச் செல்லப்படுவதாக, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தெரிவித்தது.
-----
பேராக் ஈப்போவில், அனுமதி இல்லாமல் ஹலால் சின்னத்தைப் பயன்படுத்திய உணவக உரிமையாளருக்கு 18 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.