
2027 வரவு செலவு திட்டம் குறித்து ஆதாரமற்ற தகவல்களையோ, பதிவுகளையோ சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்!
எந்த அறிவிப்பும் நாளை நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தொடர்புத்துறை அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியிருக்கிறது.
பிரதமரின் பட்ஜட் தாக்கலுக்கு முன்பு சில தரப்புகள் உறுதிச் செய்யப்படாத தகவல்களைப் பகிர வாய்ப்பிருப்பதாகக் கூறி அவ்வமைச்சு பொதுமக்களை எச்சரித்தது.
-
தீபகட்பத்தில் இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு ரோன்97 , உதவித் தொகை வழங்கப்படாத ரோன் 95 ரக பெட்ரோல் விலை 15 சென் உயர்கிறது!
உதவித் தொகை வழங்கப்படாத டீசல் விலையில் மாற்றமில்லை.
-
மின்னியல் வர்த்தகத் தளங்கள் மற்றும் வழங்குனர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியிருக்கிறது மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம்!
பயனர்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவதே அச்சந்திப்பின் நோக்கமாகும்.
-
ஜொகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும், புகைமூட்டம் காரணமாக இன்று தொடங்கி இரு நாட்களுக்கு மூடப்படுகின்றன!
அந்த இரு நாட்களும், வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளப்படும் என, மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
KESAS நெடுஞ்சாலையில் உத்தரவை மீறி காவல் துறையின் வாகன அணிவகுப்பைப் பின்தொடர்ந்து சென்ற SUV வாகனத்தின் ஓட்டுனர் கைதாகியுள்ளார்.