
குறைந்த வருமானம் பெறும் பட்டதாரிகள், PTPTN, கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான நடைமுறைகள், இறுதி வடிவம் கண்டு வருகின்றன !
அம்முயற்சி 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள், நிதி அமைச்சுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றன.
அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என, PTPTN தெரிவித்தது.
மாதத்துக்கு 2,500 ரிங்கிட் அல்லது அதற்குக் குறைவாக சம்பளம் பெறுவோர், PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்கலாம் என, பஜ்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மாதத்துக்கு 2,501 முதல் 3,000 ரிங்கிட் வரை சம்பளம் வாங்குபவர்கள், மாதந்தோறும் குறைந்தபட்சம் 50 ரிங்கிட் செலுத்தினால் போதுமானதாகும்.
அதே வேளை, முறையாக கடனை திருப்பிச் செலுத்துவோருக்கு, 10 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.
---------
வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும்படியும், துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi வலியுறுத்தியுள்ளார் !
இப்பருவம், அடுத்தாண்டு மார்ச் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் நீண்ட நேரம் பெய்யும் கனமழை, வெள்ளம் மற்றும் கடல் சீற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
----------
இதனிடையே, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பஹாங் அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது !
அதன் ஒரு பகுதியாக, அம்மாநிலம் முழுவதும் உள்ள 167 முன்கூட்டிய நிவாரண மையங்களுக்கு, உணவுப் பொருட்களை முன்கூட்டியே விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
--------
கெடா மற்றும் சிலாகூரில், 200-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் !
கெடா Yan-னில் 189 பேரும், சிலாங்கூர் Kuala Langat-டில் 20 பேரும், தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
---------
சரவாக் சட்டமன்ற தேர்தலுக்கான முக்கிய தேதிகளை முடிவுச் செய்ய, நவம்பர் 6-ஆம் தேதி, தேர்தல் ஆணையம் கூட்டம் நடத்துகிறது !
நேற்று அம்மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
-------
Astro, தனது 30-வது ஆண்டு நிறைவையொட்டி, ஒன்றிணைந்து கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில், தீபாவளிக்காக 75 மணி நேர சிறப்புப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது !
உள்ளூர் தயாரிப்புகள், புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன், Sony Vizhha அலைவரிசை 220 எனும், புதிய தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசையையும் Astro அறிமுகப்படுத்தியுள்ளது.
ராகா மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், தீபாவளிக்கான சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடவடிக்கைகளையும் Astro வழங்குகிறது.
அக்டோபர் 30-ஆம் தேதி, Bukit Jalil தேசிய அரங்கு, கார் நிறுத்துமிடம் B-யில், 2026 தீபாவளி கார்னிவல் நடைபெறும் வேளை, அதற்கு மறுநாள், Brickfields கலாமண்டபத்தில் ECR Indian Shopping Carnival நடைபெறுகிறது.