Skip to main content
புகைமூட்டம்: சட்டத்தை எடுத்தவுடன் அமுல்படுத்திவிட முடியாது!

 

 

எல்லை தாண்டிப் பரவும் புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்படும் எந்தவொரு சட்டத்தையும் இயற்றும் முன்னர், பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது!

 

அத்தகைய சட்டத்தின் செயல்திறன், இருதரப்பு உறவு ரீதியிலான தாக்கங்கள், ஆதாரங்களை நிரூபிப்பதற்கான சுமை உள்ளிட்டவை அவற்றுள் அடங்கும் என, இயற்கை வள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

காலநிலை மாற்றங்களால் ஏற்படும் மாறுபாடுகள், நீண்டகால வறண்ட வானிலை மற்றும் விவசாய நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், எல்லை தாண்டிப் பரவும் புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மேலும் சவாலாகி வருகிறது.

 

கடந்த மாதம், சிங்கப்பூர் நடைமுறைப்படுத்திய அணுகுமுறையைப் போல புகைமூட்டத்தைக் கையாள தனிச் சட்டத்தை உருவாக்கும் பணியில் அவ்வமைச்சு ஈடுபட்டுள்ளதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

------

 

மற்றொரு நிலவரத்தில், புகைமூட்ட காலகட்டத்தில் பள்ளிகளைக் கண்காணிக்கவும், பள்ளி செயல்பாட்டிற்கான தர செயல்பாட்டு நடைமுறைதை நிர்ணதிக்கவும், சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது ஜொகூர் மாநில கல்வித் துறை.

 

மாநில புகைமூட்ட நிர்வாக ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அப்பணிக்குழுவை அமைக்க இணக்கம் காணப்பட்டதாக, மாநில கல்விக்கான செயற்குழு தலைவர் தெரிவித்தார்.

 

ஜொகூரில் இன்று தொடங்கி புகைமூட்டத்தால் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

 

------

 

இதனிடையே ஆகக் கடைசி தகவல்படி, நாட்டில் 20 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கின்றது!

 

மலாக்கா, ஜொகூர், Putrajaya, நெகிரி செம்பிலான், சரவாக் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

------

 

புனித யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்குச் செல்வதைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கும்படி மலேசியர்களை அறிவுறுத்தியுள்ளது வெளியுறவு அமைச்சு!

 

ரியாத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அங்கு நிலவும் பரபரப்பால், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு அந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

 

------ 

 

ஐந்து கிலோகிராம் எடையிலான cocain வகை போதை பொருளை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில், ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தில் ஐந்து மலேசியர்கள் கைதாகியிருக்கின்றனர்!

 

31 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அப்போதை பொருளை அவர்கள் அனைவரும் தங்களின் காலணியில் மறைத்து வைத்திருந்தது அம்பலமானது.

RAAGA Aaha Siranta Isai!