
தற்போது சில பகுதிகளில் நிலவும் புகைமூட்டத்தை எதிர்கொள்ள, பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளனர் !
குறிப்பாக, வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என, பொது சுகாதார மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புகைமூட்டத்தால் கடுமையான மூச்சுத்திணறல், நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாகச் சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெறும்படியும் அவர் அறிவுறுத்தினார்.
ஆகக் கடைசி தகவல்படி, 38 பகுதிகளில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது.
நெகிரி செம்பிலான், மலாக்கா, கெடா உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளும், அவற்றில் அடங்கும்.
---------
இதனிடையே, கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும், ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் உள்ள, அனைத்து பள்ளிகளும் இன்று மூடப்படுகின்றன !
பஹாங் Rompin-னில் உள்ள பள்ளிகளும் மூடப்படுவதாக, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அப்பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக உள்ளதே, அம்முடிவுக்கான காரணமாகும்.
-----------
2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், மக்களின் சுமையைக் குறைத்து, அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என, பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் !
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடைவதை அத்திட்டம் உறுதிசெய்யும் என்றும், Datuk Seri Anwar Ibrahim கூறினார்.
அந்த திட்டத்தை, இன்று பிற்பகல் மணி 3.30-க்கு, அவர் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.
---------
BAS.MY ஜொகூர் பாரு பேருந்துச் சேவை, அடுத்தாண்டு முதல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது !
அத்திட்டத்தின் கீழ், பேருந்து வழித்தடங்கள் மேம்படுத்தப்படுவதுடன், பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
---------
சிலாங்கூர் ஷா அலாமில், தாயும் அவரது இரு பிள்ளைகளும் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர்கள் பயணித்த காரில் இருந்த மற்றொரு மகன் படுகாயமடைந்துள்ளான் !