Skip to main content
புகைமூட்டம் ; தீவிரமாகும் சிலாங்கூர் !

 

புகைமூட்டப் பிரச்சினையைக் கையாள ஏதுவான நடவடிக்கைகளை, சிலாங்கூர் அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது !

இதையடுத்து, மாநில மற்றும் மாவட்ட அளவிலான அரசாங்க அமைப்புகளின் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும் என, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

காற்றின் தரத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும்படி, தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு, முன்னதாக அழைப்பு விடுத்தது.

புகைமூட்டத்தைக் கையாள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் NADMA வலியுறுத்தியிருந்தது.

அந்த அழைப்புக்கு ஏற்ப, சிலாங்கூர் அரசாங்கம் அந்நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் கூறினார்.

இவ்வேளையில், சிலாங்கூரில் பல பகுதிகள் புகைமூட்டமாக உள்ளன.

Johan Setia-வில் ஆக அதிகமாக, காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 180-தைக் கடந்து, ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது.

--------

இதனிடையே, ஜொகூரில், Larkin மற்றும் Pasir Gudang-கில் , API குறியீடு 200-ரைக் கடந்து, மிக ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது !

அம்மாநிலத்தில் மேலும் சில பகுதிகளும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

மற்ற மாநிலங்களின் சில பகுதிகளிலும், புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.

--------

கடந்த மாதம் Long Lellang பகுதியில் நிகழ்ந்த மருத்துவ சேவையை வழங்கும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஐவரின் குடும்பங்களுக்கு, சரவாக் அரசாங்கம், தலா 1 லட்சம் ரிங்கிட்டை வழங்கியுள்ளது !

உயிரிழந்தவர்களின் பிள்ளைகளின் கல்விக்காக, Yayasan Sarawak அறக்கட்டளையின் நிதியுதவியும், அக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

---------

கெடா, பெர்லிஸ், பினாங்கு உட்பட பெரும்பாலான மாநிலங்களின் சில பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !

--------

தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்தி வாசிக்கும் கனவுடைய 8-லிருந்து 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக, Astro உலகம் ஏற்பாட்டில் தொடங்கியுள்ளது இளம் செய்தி வாசிப்பாளர் தேடல் !

ஐந்து முதன்மை வெற்றியாளர்களுக்குத், தலா ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுடன், Astro செய்திகள் மற்றும் Astro Audio செய்திகளில் செய்தி வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்; தமிழ் செய்தி வாசிப்பாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் உண்டு.  

இன்று விண்ணப்பத்திற்கான கடைசி நாளாகும்; மேல் விவரங்களுக்கும் Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வரலாம். 

RAAGA Aaha Siranta Isai!