Skip to main content
புகைமூட்டத்தைக் கையாள மக்களும் ஒத்துழைக்க வேண்டும் !

புகைமூட்டத்தைக் கையாள்வதில் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் !

அவ்வாறு பிரதமர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வரும் அதே வேளை, அப்பிரச்சனையைக் களைவதில் மக்களின் பங்களிப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், புகைமூட்டமும் வெப்பமும் சூழ்ந்துள்ள இக்காலக்கட்டத்தில், மக்கள் மின்சார பயன்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டு கொண்டுள்ளார்.

சிக்கனமான எரிசக்தி பயன்பாடு தொடர்ந்து மக்களை பாதுகாக்கும் என அவர் கூறினார்.

--

இவ்வேளையில், நாட்டில் 22 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது.

அவை, சரவாக், சபா, KL, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பேராக் மாநிலங்களை உள்ளடக்கியவை ஆகும்.

--

இனம், மதம் ஆட்சியாளர் எனப்படும் 3R கூறுகளை அவமதிக்கும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட காணொலி தொடர்பில், உடனடியாக முழு விசாரணை ஒன்றை நிகழ்த்துமாறு காவல்துறையையும் தொடர்புதுறை அமைச்சையும் ஒற்றுமை துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, அத்தகைய காணொளி ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டு வைரலானது. 

--

இவ்வாண்டு டிசம்பர் மாத மத்தியப் பகுதியில் ECRL கிழக்குகரை ரயில் இணைப்பு திட்டத்தைத் தொடங்க MRL நிறுவனம் பணியாற்றி வருகிறது!

--

சிலாங்கூர், காஜாங்கில் மின்சார மீட்டர்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்த TNB அதிகாரியைத் தாக்கியதற்காக இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

விசாரணையில் அவ்விரு சந்தேக நபர்களுக்கும் முந்தைய குற்றப் பின்னணி இருந்தது தெரியவந்துள்ளது.

--

பிலிப்பின்ஸில் பள்ளி ஒன்றில் நிகழ்ந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்,  அச்சம்பவத்தை நிகழ்த்திய சந்தேக நபர் உட்பட மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

எண்மர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் நால்வர் படுகாயத்திற்கு ஆளாகியுள்ளனர். 

RAAGA Aaha Siranta Isai!