
நாட்டில் 23 இடங்களில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது !
ஜொகூரில் ஆக அதிகமான பகுதிகள் புகைமூட்டமாக உள்ளன.
Larkin மற்றும் நெகிரி செம்பிலான் சிரம்பானில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, ஆக அதிகமாக 170-ஆகப் பதிவாகியுள்ளது.
சிலாங்கூர், மலாக்கா உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளிலும், காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக உள்ளது.
----------
Tuju செயலியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன !
அப்பணிகள் நவம்பர் 6-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, அச்செயலியில் ஏற்பட்ட கோளாறுகளுக்காக, அதனை உருவாக்கிய நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
இஸ்ரேலின் Waze வழிகாட்டிச் செயலிக்குத் தடை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக Tuju செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
--------
சரவாக் சட்டமன்ற தேர்தலுக்கான முக்கிய தேதிகளை அறிவிக்க, தேர்தல் ஆணையம் சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது !
அந்தக் கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, அவ்வாணையம் தெரிவித்தது.
----------
கோலாலம்பூரில், காவல்துறை தடுப்புக் காவலில் இருந்தபோது உயிரிழந்த 42 வயது ஆடவரின் உடலில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், உள் உறுப்புகளில் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
ஆயினும், உடலின் வெளிப்புறத்தில் சில காயங்கள் காணப்பட்டன.
உயிரிழப்புக்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை ; ஆய்வகப் பரிசோதனை முடிவுகளுக்காக புக்கிட் அமான் காத்திருக்கிறது.
--------
பேராக் Sungai Siput-டில், எருமை மோதியதில், 45 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார் !