
சரவாக்கில் 6 பகுதிகளில், காற்றின் தரத்தை குறிக்கும் API குறியீடு அபாய அளவை தொட்டுள்ளது !
அவற்றில் Serian-னில் தான், அக்குறியீடு 350-கைக் கடந்து அபாய அளவில் உள்ளது.
அதோடு, அம்மாநிலத்தின் 3 வேறு பகுதிகளில், API மோசமான நிலையில் இருக்கும் வேளை, 4 பகுதிகளில், காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் உள்ளது.
இவ்வேளையில், சரவாக், கெடா மற்றும் பெர்லிசில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், வியாழக்கிழமை முதல், செயற்கை மழையைப் பொழிய வைக்கும் நடவடிக்கையை, NADMA மேற்கொள்ளவுள்ளது.
---------
பினாங்கு Tanjung Bungah-வில், மற்றொரு நாயைத் தாக்கிய சம்பவத்தில், சம்பந்தப்பட்ட நாயின் உரிமையாளருக்கு, 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது !
அந்த நாயின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தன்று, அந்த நாயை வேறு ஒருவர் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாக உரிமையாளர் தெரிவித்துள்ள நிலையில், நாய் இன்னும் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், காவல்துறையில் புகார் அளிக்கும்படி, அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், அந்த நாய் மற்றொரு நாயைத் தாக்கும் காணொலி, சமூக ஊடகங்களில் பரவலானதையடுத்து, அக்கழகம் நாயைக் கைப்பற்றி, மேலதிக விசாரணைக்காக கால்நடை சேவைத்துறையிடம் ஒப்படைத்தது.
----------
மேலும் சில செய்திகள் சுறுக்கமாக ;
பினாங்கு Air Itam-மில், குண்டர் கும்பல் உறுப்பினர்கள் எனத் தவறாகக் கருதப்பட்ட இருவர், வெட்டிக் காயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் !
--------
பேராக், கெடா உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது !
----------
இந்தோனேசியா Halmahera-வில், இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில், மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என, Met Malaysia கூறியது !
---------
Astro Audio முன்னெடுத்த KITA FM முயற்சியை, தொடர்புத் துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil பாராட்டியுள்ளார் !
அது மலேசியாவின் கூட்டு, ஒற்றுமை மற்றும் சமரசமான முகத்தை பிரதிபலிப்பதாக, அவர் வர்ணித்தார்.
நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 69-ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தில், ராகா உள்ளிட்ட 5 Astro வானொலி நிலையங்களும் இணைந்து, KITA FM-ஆக உருவெடுத்து, அங்கிருந்து தமிழ், சீன, மலாய் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் நேரடி ஒளிபரப்பை வழங்கின.
பல மொழி மற்றும் வானொலி கேட்கும் பல்வேறு குழுக்களை ஒன்றிணைக்கும் இந்த முயற்சி, மக்களை இணைக்கும் சிறந்த உதாரணம், என்றாரவர்.