Skip to main content
புதிய MyKad-ஐப் பெற அவசரம் வேண்டாம் !

புதிய MyKad-ஐ பெற மக்கள் அவசரப்பட வேண்டாம் !

 

நடப்பில் இருக்கும் MyKad இன்னும் பயன்படுத்த முடியும் எனக் கூறி, தேசிய பதிவு துறை அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.

புதிய MyKad-ஐ தவற விட்டு விடக்கூடாது என்ற பயத்தில் வழக்கத்தை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் JPN  சொன்னது.

தொலைந்துப்போன அல்லது சேதமடைந்த அடையாள அட்டையை அவசரமாக மாற்ற வேண்டியவர்களுக்கும், முகவரியை மாற்றுபவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

புதிய MyKad-ஐ அரசு மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெறுவது போன்ற அதிகாரப்பூர்வ தேவைகளுக்கு உடனடியாக பயன்படுத்தலாம்.

--

 

Kota Kinabalu அனைத்துலக விமான நிலைய ஓடுபாதை சீரமைப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

அதன் தொடர்பிலான கால வரையறைக் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

அண்மைய தகவல்களை அறிந்துகொள்ள, பயணிகள் தொடர்புடைய விமான நிறுவனங்களைத் தொடர்புக்கொள்ளுமாறு MAHB நிறுவனம் அறிவுறுத்தியது.

--

நாட்டில் பெரும்பாலான பகுதிகளைப் புகைமூட்டம் பாதித்துள்ளது !

ஆகக் கடைசி தகவல் படி நாட்டில் 31 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருப்பதாக, சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

அதிலும் அதிகமாக பேராக்கில் Tasek Ipoh, Seri Manjung ஆகிய இடங்களில் API குறியீடு 180 ஐ கடந்துள்ளது.

--

இதனிடையே, ஜொகூரில் ஜனவரி தொடங்கி கடந்த வாரம் வரை திறந்தவெளியில் தீமூட்டும் சம்பவங்கள் 4222 ஆக அதிகரித்துள்ளன!

 

அதிக வெப்பம் மற்றும் புகைமூட்டம் சூழ்ந்துள்ள இக்காலக்கட்டத்தில், பொதுமக்கள் திறந்தவெளியில் தீமூட்ட வேண்டாம் என தீயணைப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 1,200 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.

 

--

மலேசிய தினத்தை ஒட்டி, பொது பல்கலைக்கழக மாணவர்களுக்கென ஐநூரு ரிங்கிட் விமான டிக்கட் சிறப்பு உதவித் தொகையை வழங்குகிறது அரசாங்கம்! 

 

செப்டம்பர் மற்றும் அக்டோபர் தவணையில் IPTAவில் சேற தகுதிப் பெற்ற புதிய மாணவர்கள், அந்த one off உதவித் தொகையைப் பெறலாம். 

 

--

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையை விரிவுபடுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கடிதம் போலியானது!

அது குறித்து, ஏற்கனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

--

 

கெடா, சுங்கை Petani வணிக வளாகம் ஒன்றில் உள்ள நகைக் கடையில், முகமூடி அணிந்து கொள்ளையடித்துச் சென்ற நால்வரைக் காவல்துறை தேடி வருகிறது.

 

RAAGA Aaha Siranta Isai!