
53 பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய Mykad அடையாள அட்டை இன்று அறிமுகம் காண்கிறது!
நாடு முழுவதும் உள்ள நாட்பதுக்கும் மேற்பட்ட தேசிய பதிவுத் துறை அலுவலகங்களில் அவ்வட்டைகளுக்குப் பொதுமக்கள் விண்ணப்பித்து அவற்றை அதே நாளில் பெற்றுக் கொள்ளலாம்.
என்றாலும் பொது மக்கள் தங்களின் அடையாள அட்டையைப் புதுப்பிக்க அவசரம் கொள்ள வேண்டாம்.
இப்போதைக்கு அவை கட்டங்கட்டமாகவே வெளியிடப்படுகின்றன என அத்துறை கூறியது.
------
எல்லை கடந்து பரவும் புகைமூட்டத்தை கையாள மலேசியாவும் இந்தோனேசியாவும் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டுள்ளன!
புது டெல்லியில் நடைபெற்ற BRICS தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் அதன் தொடர்பில் தாம் இந்தோனேசிய தலைவரைச் சந்தித்துப் பேசியதாக பிரதமர் DSAI கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளை புகைமூட்டம் சூழ்ந்து வருவதோடு, நிலைமை அவ்வப்போது மோசமாவதும் உண்டு என்பதால், இந்த ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளது.
-----
இதனிடையே ஆகக் கடைசி தகவல்படி, பினாங்கு, சிலாங்கூர், ஜொகூர், பேராக், மலாக்கா, நெகிரி செம்பிலான், Putrajaya, கெடா, KL ஆகிய மாநிலங்களின் 29 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.
-------
Kuala Lumpur அனைத்துலக விமான நிலையத்தில் E Hailing வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் இரண்டு ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டுள்ளது!
இதற்கு முன் மூன்று ரிங்கிட்டாக இருந்த அக்கட்டணம் முதல் மற்றும் இரண்டாம் முனையங்களில் இனி 2 ரிங்கிட்டாக இருக்கும் என, Malaysia Airports Holdings தெரிவித்தது.
------
பினாங்கு, Seberang Peraiயில் 14 வயது சிறுவன் ஒருவன் காரை எதிர்திசையில் செலுத்தியதால், மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தொன்று ஏற்பட்டிருக்கிறது.