Skip to main content
புதிய பள்ளிகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் !

 

 

பழைய பள்ளிகளுக்குப் பதிலாக, புதிய பள்ளிகளைக் கட்ட, கிட்டத்தட்ட 15 பில்லியன் ரிங்கிட் செலவில், 131 திட்டங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது !

2023 முதல் 2027-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் அத்திட்டங்கள், குறிப்பாக சபா, சரவாக் மாநிலங்களில், கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, பள்ளிகளில் படிவதை மற்றும் ஒழுங்குப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த, CCTV கேமராக்களை பொருத்தும் பணிகளும் விரிவுபடுத்தப்படுவதாக, அமைச்சு கூறியது.

---------

இவ்வேளையில், கிராமப்புற மாணவர்களின் SPM தேர்ச்சி விகிதம், 2024-ஆம் ஆண்டில் 92.31 விழுக்காடாக இருந்த நிலையில், கடந்தாண்டு 92.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது !

அதே சமயம், 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நகர்ப்புற பள்ளிகளுக்கும் கிராமப்புற பள்ளிகளுக்கும் இடையிலான, SPM தேர்வு முடிவுகள் வேறுபாடு குறைந்துள்ளதாக, கல்வியமைச்சு தெரிவித்தது.

----------

கடந்த மூன்று ஆண்டுகளில், தவறான தகவல்களைக் கொண்ட 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைய உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன !

2023 ஜனவரி முதல், இவ்வாண்டு அக்டோபர் வரை, தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களை அகற்றும்படி, MCMC விடுத்த 65,680 கோரிக்கைகளில், 86 விழுக்காடு வெற்றியடைந்துள்ளதாக தொடர்புத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

---------

மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் முன்னதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட விமானப் பணியாளர் ஒருவர், பராமரிப்பு நிறுவன மேற்பார்வையாளரைக் கொலை செய்ததாகக் கூறி, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்daar !

வார இறுதியில், கோலாலம்பூர் Sultan Iskandar நெடுஞ்சாலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் செலுத்திய வாகனம் மோதி, அந்த மேற்பார்வையாளர் உயிரிழந்ததாகத் செய்திகள் வெளிவந்தன.

---------

ஐரோப்பா மற்றும் கிழக்காசியாவில் உள்ளவர்களை ஏமாற்றி வந்த தொலைபேசி மோசடிக் கும்பல் தொடர்பில், சிலாங்கூர் முழுவதும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் !

RAAGA Aaha Siranta Isai!