
மேற்கு நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் பரவலை, சுகாதார அமைச்சு நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது.
ஆனால், அந்த தொற்று, இதுவரை ஆசிய வட்டாரத்துக்கு பரவியுள்ளதற்கான சான்றுகள் இல்லை.
KKM, WHO மற்றும் பிற அனைத்துலக சுகாதார அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்புக் கொண்டு, தொற்று பரவல் குறித்த அவ்வப்போதைய தகவல்களைப் பெற்று வருகிறது.
அத்தொற்றால், இதுவரை மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
எனினும், நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது.
-----------
கோலாலம்பூர், ஜின்ஜாங் மற்றும் Batu பகுதிகளில் உள்ள வெள்ளத்தடுப்பு குள நிலப்பரப்பில், எந்தவொரு புதிய வளர்ச்சி திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது !
இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாக, கூட்டரசு பிரதேச அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது கோலாலம்பூரில் உள்ள வெள்ளத்தடுப்பு குளங்களின் திறன், அதன் ஆரம்ப அளவின் 30 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளதை அடுத்து, அம்முடிவு எடுக்கப்பட்டது.
----------
தலைநகர் Jalan Tun H.S. Lee-யில் உள்ள கடை வீடு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், வெள்நாட்டு ஆடவர் உயிரிழந்ததை அடுத்து, மற்ற 11 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் !
---------
கிளாந்தானில், 19 வயதுடைய இளம் பெண்ணை, 61 முறை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் கல்லூரி மாணவர் மீது, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !
---------
பேராக் Pulau Pangkor-ரில், சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் படகு ஒன்று கவிழ்ந்து காணாமல் போன சுமார் 14 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன !