
Petrol விநியோகத்தில், கவலை வேண்டாம் என பிரதமர் தெரிவித்துள்ளார் !
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, குறிப்பாக மத்திய கிழக்கு போரால் ஏற்பட்டிருந்தாலும், குறைந்தது ஆகஸ்ட் மாதம் வரை, அதன் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதாக, Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.
மலேசியா, ஈரானுடன் நல்லுறவு வைத்திருப்பதன் வழி, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல முடிந்ததால், அதன் விநியோகம் உறுதியானது.
அண்டை நாடுகள் தற்போது மிகவும் கடினமான நிலையை எதிர்கொள்கின்றன.
உதாரணமாக, பிலிப்பைன்ஸ் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் இருந்ததையும், சில நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதையும், அவர் மேற்கோள்காட்டினார்.
----------
ஹஜ் பெருநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சாலை சோதனை நடவடிக்கையில், கிட்டத்தட்ட ஈராயிரம் போக்குவரத்து சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளன !
பண்டிகைக் காலத்தில் சாலைப் பயனர்களின் பயணம் சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய, அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
----------
கெடா Kepala Batas-சில், பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக, ஆடவர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !
அவரை, மனநல பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
---------
சிலாங்கூர் காஜாங்கில், காவல்துறையினர்களுக்கிடையிலான துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிர குற்றவாளிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் !
கிள்ளான் பள்ளத்தாக்கில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்களில், அவ்விரு சந்தேக நபர்களுக்கும் தொடர்பு இருந்ததாக, விசாரணையில் தெரியவந்துள்ளதாக Bukit Aman தெரிவித்துள்ளது.
----------
பொதுமக்கள் சிறந்த அனுபவம் மற்றும் சீரான சேவைகள் பெறுவதை உறுதிச் செய்ய, ஜூன் 1-ஆம் தேதி முதல் அறிமுகமாகவிருந்த மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக, குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது !