Skip to main content
Puncak Alam மேம்பாட்டுப் பணிகள் நிறுத்தம் !

 

சிலாங்கூரின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, Puncak Alam பகுதியில் அனைத்து மேம்பாட்டுப் பணிகளையும் உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது !

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆகியவை, மறுபரிசீலனை செய்யப்படும் வரை, அப்பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் என, மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ராவாங்கில் உள்ள Jalan Batu Arang சாலை, மண் சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்படும்.

சாலை சீரமைப்புப் பணிகளுக்கு வழிவிடும் வகையில், அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தற்போது, Kuala Selangor, கிள்ளான், ஷா அலாம் ஆகிய பகுதிகளில், 1,100-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே வேளை, பேராக்கில் 112 பேர், PPS மையங்களில் தங்கியுள்ளனர்.

--------

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak-கின் வீட்டுக் காவல் தண்டனையை அமல்படுத்துவதை, சட்டத்துறை அலுவலகம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது !

செப்டம்பர் 18-ஆம் தேதி வழங்கப்பட்ட நிபந்தனையுடனான மன்னிப்பு உத்தரவின் விளக்கம் குறித்து, கூடுதல் தெளிவு பெறுவதற்காக, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, SRC International நிதி முறைகேடு வழக்கில் விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை, நஜிப் நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் செலுத்தி முடித்துள்ளார்.

அந்த அபராதத் தொகையைச் செலுத்துவது, மாமன்னர் வழங்கிய நிபந்தனையுடனான மன்னிப்பு உத்தரவின்படி, எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்.

---------

நேபாளம் – திபெட் எல்லை பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரிடரில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 ஆயிரம் ரிங்கிட் ஒருமுறை நிதியுதவி வழங்க, அரசாங்கம் முடிவு செய்துள்ளது !

NADMA வழியாக அந்த நிதியுதவி வழங்கப்படும் என்றும், முன்னுரிமை அடிப்படையில், மாயமானவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு முதலில் அந்நிதி வழங்கப்படும் என்றும், மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு இறுதியில் நிகழ்ந்த அப்பேரிடரில், 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வேளை, ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.

---------

Negeri Sembilan-னில், போதைப்பொருள் கலந்த Vape பயன்படுத்திய பள்ளி மாணவர் தொடர்பான சம்பவம் தொடர்பில், போதைப்பொருள் விநியோகித்து வந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களைக், காவல்துறை கைது செய்துள்ளது !

கைதானவர்களில், பாதிக்கப்பட்ட மாணவரின் பள்ளி நண்பரான 17 வயது மாணவரும், பள்ளிக்குச் செல்லாத 18 வயது இளைஞரும் அடங்குவர்.

--------

சிலாங்கூர் சுல்தான் தம்பதியினர், மலேசியாவில் குறிப்பாக சிலாங்கூரில் வாழும் அனைத்து இந்து மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர் !

நாளை அனைவரும் தீபத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

RAAGA Aaha Siranta Isai!