Skip to main content
ரோன்95, டீசல் விலை ஏற்றம்!

 

தீபகட்பத்தில் உதவித் தொகை வழங்கப்படாத ரோன்95 ரக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை முறையே ஐந்து மற்றும் பத்து சென் உயர்கிறது! 

 

இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு ரோன்95 லிட்டருக்கு 3 ரிங்கிட் 42 சென்னுக்கும், டீசல் 4 ரிங்கிட் ஏழு சென்னுக்கும் விற்கப்படும்.

 

ரோன்97 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு நான்கு ரிங்கிட்டாக நீடிக்கிறது. 

 

------

 

இதனிடையே அரசாங்கத்தின் எரிபொருள் மானியத்திற்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு 40 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என கணிக்கப்படுகிறது!

 

மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களால் உலக எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மலேசியாவைப் பாதுகாக்க, அரசாங்கம் முழு கடப்பாடு கொண்டிருப்பதாக நிதி துணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இப்போதைக்கு எந்த எரிபொருள் மானியமும் குறைக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

------ 

 

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி 25 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

 

அவ்வகையில் மஇகா சார்பில் இரு இந்திய வேட்பாளர்கள் இம்முறை போட்டியில் குதித்துள்ளதாக, BN துணை தலைவர் Datuk Seri Mohamad Hasan தெரிவித்துள்ளார்.

 

Sri Tanjung தொகுதியில் A. Achutan மற்றும் Seremban Jayaவில் R. Thinalan ஆகியோரே அந்த இருவர்.

 

நேற்று பக்காத்தான் ஹராப்பான் அறிவித்திருந்த வேட்பாளர் பட்டியலில் ஐந்து இந்தியர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

------ 

 

இதனிடையே ஜொகூர் மாநில தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறாததை அடுத்து, நெகிரி செம்பிலானில் போட்டியிடுவதில்லை என்ற தனது முடிவை அறிவித்துள்ளது பெர்சாமா.

 

------ 

 
ஜொகூர், Kluangகில் தனது பள்ளி பேருந்து மோதி ஏழு வயது மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது!

 

பேருந்தை ஓட்டிச் சென்ற 36 வயது மாது சம்பவத்தால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

RAAGA Aaha Siranta Isai!