
Chan Sow Lin LRT ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று தடம் புரண்ட சம்பவத்தை, போக்குவரத்து அமைச்சு கடுமையாகக் கருதுகிறது !
இந்தச் சம்பவத்தில் அலட்சியம் காட்டியவர்களுக்கு, பணி நீக்கம் உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, அமைச்சர் Anthony Loke தெரிவித்துள்ளார்.
இதுவொரு சாதாரண விஷயம் அல்ல ; பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது என அவர் கூறினார்.
---------
இதனிடையே, ரயில் தடம் புரண்ட இடத்தில், பழுபார்ப்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன !
இன்று காலை ஏற்பட்ட அச்சம்பவத்தின் போது, ரயிலில் இருந்த 25 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அதனால், Ampang/Sri Petaling வழித்தடத்தில், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
------------
Negeri Sembilan Seremban-னில், 11 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு, மேலதிக விசாரணை நடத்தி வருகிறது !
இந்தச் சம்பவம், குடும்ப பராமரிப்பு பிரச்சினைகளின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக, அமைச்சு கூறியது.
வீட்டின் பின்புறத்தில், தண்ணீர் வாளியில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அக்குழந்தையின் குடும்பத்தினரிடமிருந்து அமைச்சு, அச்சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்து வருகிறது.
----------
Hulu Selangor-ரில், Sungai Nilam ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவனை தேடும் பணி, 3 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது !
இரண்டாவது நாளாக அவனை தேடும் பணிகள் தொடர்கின்றன.
-----------
மலாக்காவில், போதைப்பொருள் வாங்கக் கேட்ட பணத்தைக் கொடுக்க மறுத்த மனைவியை, உதைத்து காயத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கணவர் மீது, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது !